திருச்சியில் தடையின்றி நடைபெற்று வரும் வெளி மாநில லாட்டரி சீட்டு

திருச்சியில் தடையின்றி நடைபெற்று வரும் வெளி மாநில லாட்டரி சீட்டு

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் அருகே உள்ள நொச்சியம் பகுதியில் தடை செய்யப்பட்ட கேரளா லாட்டரி சீட்டுகள் தடையின்றி விற்பனை செய்யப்படுகிறது. மண்ணச்சநல்லூர் போலீஸ் சரகத்திற்கு உட்பட நொச்சியம் பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட வெளி மாநில லாட்டரி சீட்டுகள் விற்கும் பணியில் சிலர் ஈடுபட்டு வருகின்றனர். இந்த லாட்டரி சீட்டு விற்பனையில் ஈடுபடும் நபர்கள் ஒவ்வொரு 3 மணி நேரத்திற்கு இடத்தை மாற்றி மாற்றி சாதுர்யமாக தடையின்றி விற்பனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

தினமும் லாட்டரி சீட்டு வாங்க வரும் வாடிக்கையாளர்களிடம் அவர்களுக்கு தேவையான லாட்டரி எண்கள் மற்றும் அவர்களுடைய பெயர்களை எழுதிக்கொள்ளும்  லாட்டரி ஏஜெண்டுகள் தொகை பெற்றுக்கொண்டதற்காக வாடிக்கையாளர்களிடம் ஒரு வெள்ளை துண்டு சீட்டை ரசீதாக வழங்குகின்றனர். பின்னர் இறுதி முடிவு வெளிவந்ததும் லாட்டரி ஏஜெண்டுகள் அதிர்ஷ்டத்தில் வெற்றி பெற்றவர்களிடம் கமிஷன் தொகை போக மீத தொகையை வெளிமாநில லாட்டரி ஏஜெண்டுகளிடம் இருந்து மண்ணச்சநல்லூர் லாட்டரி ஏஜெண்டுகள் வாடிக்கையாளர்களுக்கு பெற்று தருகின்றனர்.

நொச்சியம் பகுதியில் லாட்டரி சீட்டு விற்பனை நடைபெறுவதை அறிந்த செய்தியாளர்கள் அங்கு சென்று வீடியோ எடுப்பதை அறிந்த லாட்டரி வாங்க வந்த வாடிக்கையாளர்களும், லாட்டரி விற்பனை ஏஜெண்டுகளும் சம்பவ இடத்தில் இருந்து தலை தெறிக்க ஓடினர். இந்த லாட்டரி சீட்டு விற்பனை குறித்து மண்ணச்சநல்லூர் காவல்துறையினர் கண்டு கொள்ளாமல் இருப்பது ஏன்? தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்பனை செய்வதாக மாதா மாதம் ஒரு வழக்கு பதிவு செய்யப்படுவதாக கூறப்படுகிறது. ஆனால் முற்றிலும் லாட்டரி விற்பனையை ஒழிக்க ஏன் முடியவில்லை என சமூக ஆர்வலர்கள் குற்றம் கேள்வி எழுப்புகின்றனர்.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் 25 ம் தேதி இதேபோன்று மண்ணச்சநல்லூர் காவல் நிலையம் அருகில் உள்ள காய்கறி சந்தையில் ஒரு கடையில் நாள் ஒன்றுக்கு பல லட்சம் கணக்கில் தடை செய்யப்பட்ட வெளி மாநில லாட்டரி சீட்டுகள் விற்பனை நடைபெற்று வந்தது குறிப்பிடதக்கது.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய.... https://chat.whatsapp.com/GgA8w690Wqd7IwIEsO6ZZ5

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn