கருங்குளம் ஜல்லிக்கட்டு போட்டி நிறைவு - 33 பேர் காயம்

கருங்குளம் ஜல்லிக்கட்டு போட்டி நிறைவு - 33 பேர் காயம்

திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த கருங்குளத்தில் புனித வனத்து அந்தோணியார் பொங்கல் திருவிழாவையொட்டி  நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டி நிறைவுபெற்றது. இப்போட்டியை ஸ்ரீரங்கம் வருவாய் கோட்டாட்சியர் செல்வராஜ் போட்டியை தொடங்கி வைத்தார். முன்னதாக அதிகாரிகள் முன்னிலையில் வீரர்கள உறுதி மொழி ஏற்றனர்.

தேவாலயத்தில் புனித நீர் தெளிக்கப்பட்டு வாடிவாசல் வந்தடைந்த கோவில் காளைகள் முதலில் அவிழ்க்கப்பட்டதைத் தொடர்ந்து பல்வேறு மாவட்டங்களில் இருக்கும் காளைகள் ஒன்றின்பின் ஒன்றாக வாடிவாசலில் அவிழ்க்கப்பட்டு வருகிறது. வாடிவாசல் வழியே திமிறி சீறிபாய்ந்த காளைகள் காளையர்களை கலங்கடித்த நிலையில் நின்று விளையாடியது. சில காளையர்கள் தொட்டு கூட பார்க்க முடியாதபடி சீறிபாய்ந்தது.

இருப்பினும் சில காளைகளை வீரர்கள் திமில் பிடித்து தழுவினர். காளைகளை பிடித்த வீரர்களுக்கு தங்க காசு, வெள்ளிக்காசு, ரொக்கம், சைக்கிள், பீரோ, கட்டில், பாத்திரங்கள் என பரிசுகள் வழங்கப்பட்டு வருகிறது. வீரர்களின் கைகளில் பிடிபடாத காளையின் உரிமையாளர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது. சிறந்த மாட்டிற்கு பிரிட்ஜ், சிறந்த மாடுபிடி வீரருக்கு வாஷிங் மிஷன் வழங்கப்படடது. களத்தில் ஒரு சுற்றுக்கு 25 வீரர்கள் வீதம் இறக்கப்பட்டு வருகின்றனர், தற்பொழுது வரை 6 சுற்றுகள் முடிவடைந்துள்ளது. இதில் 33 பேர் காயமடைந்துள்ளனர்.

11 மாட்டின் உரிமையாளர்கள், 17 மாடுபிடி வீரர்கள். 5 பார்வையாளர் இதில் 6 பேர் மேல் சிகிச்சைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனையில் அனுமதி. அவிழ்க்கப்படும் அனைத்து காளை உரிமையாளர்களுக்கு அண்டா, வேஷ்டி மற்றும் தென்னங்கன்று வழங்கப்பட்டது. இதில் சிறந்த மாடுபிடி வீரராக கருங்குளத்தை சேர்ந்த சுள்ளான் (எ) பிரவீனுக்கு வாஷிங் மிஷினையும் (பள்ளிகல்வித்துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி சார்பில் வழங்கப்பட்டது). சிறந்த மாட்டுக்கான பரிசை பெரிய ஆணைக்கரை பட்டியை சேர்ந்த டேவிட் என்பவருக்கு 4  கிராம் தங்கம் வழங்கப்பட்டது.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/GgA8w690Wqd7IwIEsO6ZZ5

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn