திருச்சி அரியமங்கலத்தில் அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் 4 மாடுகள் உயிரிழப்பு

திருச்சி அரியமங்கலத்தில் அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் 4 மாடுகள் உயிரிழப்பு

திருச்சி மாவட்டம் அரியமங்கலம் பகுதியில் இரவு நேரங்களில் கால்நடைகள் தேசிய நெடுஞ்சாலைகள், மற்றும் தெரு பகுதிகளில் சுற்றி வருகின்றன. இதனைக் கால்நடை வளர்ப்பவர்கள் கண்டுகொள்ளாமல் உள்ளனர். இதனால் வாகன ஓட்டிகள் நாள்தோறும் பல்வேறு விபத்துகளை சந்தித்து வருகின்றனர். இந்த நிலையில் அரியமங்கலம் அம்பிகாபுரம் பகுதியில் இன்று (26.11.2021) அதிகாலை நேரத்தில் அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று சாலையில் நின்று கொண்டிருந்த மாடுகள் மீது மோதியது. 

இதில் சம்பவ இடத்தில் நான்கு மாடுகள் உயிரிழந்தது. மேலும் ஒரு மாட்டிற்கு கால் முறிந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்தது. இறந்த மாடுகளின் சடலத்தை மாநகராட்சியினர் மீட்டுச் சென்றனர். மேலும் கால் முறிவு ஏற்பட்ட மாட்டிற்கு கால்நடை மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

சாலைகளில் கால்நடைகள்  சுற்றி திரிந்தால் கால்நடை வளர்ப்பவர்களுக்கு ரூபாய் 10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என மாநகராட்சி அறிவிப்பு வெளியிட்டது. இருந்தாலும் அதனைப் பொருட்படுத்தாமல் கால்நடை வளர்ப்பவர்களின் அலட்சிய போக்கால் சாலையிலேயே மாடுகள் திரிவதால் இதுபோன்ற விபத்துகள் நடைபெற்று வருவதாக சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/CPlniGdgtVjJshLPGFrWRq

டெலிகிராம் மூலமும் அறிய...
https://t.me/trichyvisionn