திருச்சியில் சூசையப்பர் சிலை சேதம் - போலீசார் குவிப்பு

திருச்சியில் சூசையப்பர் சிலை சேதம் - போலீசார் குவிப்பு

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள பனையக்குறிச்சி ஊராட்சிக்கு உட்பட்ட மாதா கோவில் தெருவைசேர்ந்த பொதுமக்கள் புதிதாக சூசையப்பர் சிலையை வைத்துள்ளனர். இச்சம்பவம் குறித்து பனையக்குறிச்சி ஊராட்சி நிர்வாகத்திற்கு தகவல் கிடைத்ததும் பனைய குறிச்சி ஊராட்சி மன்ற தலைவர் ரேணுகாதேவியின் கணவர் பார்த்தசாரதி ஆட்களுடன் இன்று அதிகாலை சென்று சாலையின் குறுக்கே சிலையை வைத்துள்ளதாக கூறி சூசையப்பர் சிலையை சேதப்படுத்தியதாக கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து ஊராட்சி மன்ற தலைவரின் கணவர் தரப்பிற்கும் மாதா கோவில் தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்படும் சூழ்நிலை உருவானது. இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த திருவெறும்பூர் டிஎஸ்பி அறிவிலகன் தலைமையிலான போலீசார் அங்கு குவிக்கப்பட்டனர். பின்னர் இச்சம்பவம் குறித்து மாதா கோவில் தெருவை சேர்ந்த பொதுமக்கள் திருச்சி மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து புகார் மனு கொடுக்க சென்றுள்ளனர்.

இந்த பகுதியில் இருந்த மாதா சிலையை கடந்த 15 நாட்களுக்கு முன்பு ஊராட்சி இடத்தில் இருப்பதாக கூறி நீதிமன்ற உத்தரவின் படி அகற்றினார்கள். அதற்கு மாதா கோவில் தெருவினர் எதிர்ப்பு தெரிவித்து ஆட்சியரை சந்தித்து முறையிட்டதோடு போராட்டம் நடத்தி வந்த நிலையில் மீண்டும் அந்த பகுதியில் புதிதாக வைக்கப்பட்ட சூசையப்பர் சிலை சேதப்படுத்தப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தப்பட்டுள்ளது.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய.... https://chat.whatsapp.com/GgA8w690Wqd7IwIEsO6ZZ5

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn