திருச்சியில் போதை பொருள் விற்பனை - இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியினர் கள ஆய்வு

திருச்சியில் போதை பொருள் விற்பனை - இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியினர் கள ஆய்வு

திருச்சி உறையூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் அதிகளவில் கஞ்சா, போதை மருந்து, மாத்திரை உள்ளிட்ட பல்வேறு வகையான போதைப் பொருட்கள் விற்பனை அதிகளவில் நடைபெற்று வருகிறது. இது குறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் ஏற்கனவே சம்பந்தப்பட்ட காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் திருச்சி உறையூர் பாண்டமங்கலம் காவல்காரன் தெரு இரண்டாவது மெயின் ரோடு அருகே உள்ள தோப்பில் போதை மருந்து, மாத்திரை, கஞ்சா உள்ளிட்ட பல்வேறு வகையான போதை பொருட்கள் பயன்படுத்தப்பட்டு கீழே வீசப்பட்டிருந்தன. இது குறித்து தகவல் கிடைத்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நிர்வாகி சி. சந்திர பிரகாஷ் தலைமையில், மேற்கு பகுதி செயலாளர் இரா.சுரேஷ் முத்துசாமி, அனைத்திந்திய மாணவர் பெருமன்ற மாவட்ட தலைவர் க.இப்ராஹிம், இளைஞர் பெருமன்ற நிர்வாகி கே.தர்மா, கட்சி நிர்வாகிகள் சரண் சிங், நாகராஜ், மௌலானா, ரபீக் உள்ளிட்டோர் கள ஆய்வு செய்தனர்.

மேலும் சம்பவம் இடத்திற்கு  அருகிலேயே சிபிஎஸ்சி பள்ளி இயங்கி வருகிறது குறிப்பிடத்தக்கது. மேலும் போதை பொருட்களை பயன்படுத்தக்கூடிய நபர்கள் பள்ளி கல்லூரி செல்லக்கூடிய மாணவர்களாகவும், இளைஞர்களாகவும் உள்ளனர் என்பது இதில் மிகவும் வேதனைக்குரிய ஒன்றாக இருக்கிறது.

இது சம்பந்தமான நடவடிக்கை எடுக்காமல் அலட்சியமாக உள்ள காவல் நிலையத்தை கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மேற்கு பகுதி செயலாளர் இரா.சுரேஷ் முத்துசாமி தலைமையில் (01.02.2023) அன்று குறத்தெரு நான்கு வழி சந்திப்பு அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற இருக்கிறது.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/GgA8w690Wqd7IwIEsO6ZZ5
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn