ஸ்ரீரங்கத்தில் ரஜினி போட்டியிட்டு மகத்தான வெற்றி பெற ரசிகர்கள் வெள்ளித் தேர் இழுத்து வழிபாடு!!

ஸ்ரீரங்கத்தில் ரஜினி போட்டியிட்டு மகத்தான வெற்றி பெற ரசிகர்கள் வெள்ளித் தேர் இழுத்து வழிபாடு!!

திருச்சி மாநகர் புறநகர் முழுவதும் ரஜினி ரசிகர்கள் பல்வேறு நலத்திட்ட உதவிகள் அன்னதானம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்று சிறப்பு பூஜைகள் நடத்தி வருகின்றனர், இதன் ஒரு பகுதியாக திருச்சி ஸ்ரீரங்கத்தில் அமைந்துள்ள ராகவேந்திரா மடத்தில் வெள்ளித் தேர் இழுத்து சிறப்பு பூஜை செய்து வழிபாடு செய்தனர்,

Advertisement

திருச்சி ஸ்ரீரங்கம் பகுதி கழக ரஜினி மக்கள் மன்றம், திருச்சி மாநகர செயலாளர் ரவிசங்கர் தலைமையில் திருச்சி ஸ்ரீரங்கம் ராகவேந்திரா மடத்தில் வருடம் தோறும் ரஜினி பிறந்தநாளுக்கு வழிபாடு செய்து வெள்ளித் தேர் இழுப்பது வழக்கம் இந்த ஆண்டு ரஜினி அரசியல் கட்சி துவங்குவதற்கான அறிவிப்பு வெளியிட்டுள்ள நிலையில் ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர், அதன்படி இன்று ஸ்ரீரங்கம் ராகவேந்திரா மடத்தில் சிறப்பு பூஜைகள் செய்து, வெள்ளிக்கோல் ஏந்தி, வெள்ளி தேர் இழுத்து வலம் வந்து வழிபாடு செய்தனர் இதில் ஆண்கள் பெண்கள் என 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்..கடந்த 30 வருடங்களாக இங்கு ரஜினி பிறந்தநாளுக்கு வெள்ளித் தேர் இழுத்து வழிபாடு செய்வது குறிப்பிடத்தக்கது..

ரஜினி மக்கள் மன்றம் மாநகர செயலாளர் ரவி சங்கர் கூறுகையில்

இந்த ஆண்டு ரஜினி ரசிகராக கொண்டாடுகிறோம் அடுத்த ஆண்டு தமிழக முதல்வர் ரஜினிக்காக கொண்டாடுவோம்.. எனவும் ஸ்ரீரங்கம் தொகுதியில் ரஜினி நிற்க வேண்டும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்.. இந்த தொகுதியை தேர்வு செய்தால் மிகப்பெரிய வெற்றி கிடைக்கும் ஸ்ரீரங்கம் தொகுதி என்பது முன்னாள் முதல்வர்கள் தொகுதியாக உள்ளது இங்கு அவருக்கு மிகப்பெரிய வெற்றியை கிடைப்பதற்கு நாங்கள் உழைப்போம் என தெரிவித்தனர்.

Advertisement