திருச்சி கி.ஆ.பெ.அரசு மருத்துவ கல்லூரியில் வகுப்புகள் தொடங்கிய முதல் நாளில் 2 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி

திருச்சி கி.ஆ.பெ.அரசு மருத்துவ கல்லூரியில் வகுப்புகள் தொடங்கிய முதல் நாளில் 2 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி

தமிழகத்தில் கொரோனா பரவல் அச்சம் காரணமாக பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்ட நிலையில் மருத்துவக்கல்லூரிகள் வகுப்புகள் இன்று முதல் நடைபெறும் என அரசு அறிவித்த நிலையில் 6 மாதங்களுக்குப் பிறகு திருச்சி கி.ஆ.பெ.அரசு மருத்துவ கல்லூரியில் வகுப்புகள் இன்று தொடங்கியது.

அரசு வழிகாட்டுதலின்படி மாணவ, மாணவிகள் அனைவரும் தடுப்பு ஊசி செலுத்தி கொண்ட பின்னர் அவர்களுக்கு கொரோனா பரிசோதனை நெகட்டிவ் சான்றிதழ் இருந்தால் மட்டுமே மருத்துவக் கல்லூரிக்கு அனுமதிக்கப்பட்டனர். எம்பிபிஎஸ், பல் மருத்துவம், பிஎஸ்சி நர்சிங் மற்றும் லேப் டெக்னீசியன் படிப்புகளுக்கு என மொத்தம் 750 மாணவ, மாணவிகள் இன்றைய தினம் வருகை தந்து உள்ளனர். இவர்களுக்கு தியரி எனப்படும் பாட வகுப்புகள் மற்றும் செய்முறை வகுப்புகளும் தொடங்கியது.

முக கவசம் அணிந்த படி சமூக இடைவெளியுடன் அமர்ந்தபடி பாடங்களைப் பயில தொடங்கினர். இன்று வருகை தந்த 2 மாணவர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டு அவர்கள் குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டதாகவும், அவர்களுடன் தொடர்பில் இருந்த மாணவர்களும் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளதாகவும் மருத்துவக் கல்லூரி துணை முதல்வர் அர்ஷியா பேகம் தெரிவித்தார்.

நான்கு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு அவர்களுக்கு வகுப்புகள் இன்று முதல் நடைபெறுவதாகவும், ஆன்லைன் மூலம் வகுப்புகள் எடுத்தாலும் நேரடியாக மாணவர்கள் கல்லூரிக்கு வருகை தந்து கல்வி கற்பது என்பதுதான் சரியாக இருக்கும், எனவே மாணவர்கள் அனைவரும் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடித்து பாடங்களை பயில வேண்டும் எனவும் தெரிவித்துக் கொண்டார்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/Efyz91DMUiEK0NHbCDuGqJ

டெலிகிராம் மூலமும் அறிய....
https://t.me/trichyvisionn