திருச்சியில் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு

திருச்சியில் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு

கொரோனா வைரஸ் தொற்று நோய் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக உலக நாடுகளை உலுக்கி வருகிறது. கொரோனா வைரஸ் தொற்றுநோய்க்கு தடுப்பூசி கண்டுபிடித்த பிறகு, உலக நாடுகள் பலவும் மக்களுக்கு தடுப்பூசி செலுத்தி வருகின்றன. இந்தியாவில் கோவாக்சின், கோவிஷீல்டு தடுப்பூசிகளின் பயன்பாட்டுக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. அதோடு, ரஷ்யாவின் ஸ்புட்னிக் வி தடுப்பூசிக்கு அவசரகால பயன்பாட்டுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

திருச்சியில் கொரானா தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களின் விவரம் மாநகராட்சி நிர்வாகம் வெளியிட்டுள்ளது. திருச்சியில் மொத்த மக்கள் தொகை 2,92,0239 பேர். 18 வயதிற்கு மேற்பட்டவர்களின் எண்ணிக்கை 2,093,227. சுகாதார ஊழியர்கள், முன் களப்பணியாளர்கள், பொதுமக்கள் பணியிடங்கள் என தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களின் முதல் தவணை தடுப்பூசி செய்து கொண்டவர்களின் எண்ணிக்கை 7,75,965 பேர். இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களின் எண்ணிக்கை 1,89,238 மொத்தமாக 9,65,203 எண்ணிக்கையில் தடுப்பூசி செலுத்திக் கொண்டனர்.

ஒட்டுமொத்தமாக தடுப்பூசி செலுத்தி கொண்டவர்கள் 37.1%  என்ற விகிதத்தில் பதிவாகியுள்ளது. மாநகராட்சி முழுவதும் கொரோனா தடுப்பூசி செலுத்துவதற்காக பல முகாம்கள் அமைக்கப்பட்டு கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் செலுத்தப்பட்டது. கோவிஷீல்டு முதல் தவணை தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் எண்ணிக்கை 7,06,853 மற்றும் இரண்டாம் தவணைத் செலுத்திக் கொண்டவர்களின் எண்ணிக்கை 1,49,227 ஒட்டுமொத்தமாக 8,56,080. இரண்டு தவணை தடுப்பூசி எடுத்துக் கொண்டவர்கள்  விதத்தில் 21.1% என்ற எண்ணிக்கையிலும் 

கோவாக்சின் முதல் தவணை 69,112 மற்றும் இரண்டாவது தவணை 40,011 மொத்தமாக 1,09,123 ஆகவும் ஒட்டு மொத்தமாக இரண்டு தடுப்பூசிகளையும் செலுத்திக் கொண்டவர்களின் விகிதம் 24.4 என்ற எண்ணிக்கையில் பதிவாகி இருப்பதாக தெரிவித்துள்ளனர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/Efyz91DMUiEK0NHbCDuGqJ

டெலிகிராம் மூலமும் அறிய....
https://t.me/trichyvisionn