திருச்சி மாநகரில் பொதுமக்களிடம் பிக்பாக்கெட் அடித்து சென்ற 13 பேர் கைது
திருச்சி மாநகர காவல் ஆணையர் கார்த்திகேயன் திருச்சி மாநகரத்தில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்கவும், வழிப்பறி போன்ற குற்ற சம்பவங்கள் ஏதும் நடைபெறா வண்ணம் முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளவும், வாகன தணிக்கை செய்து, குற்றவாளிகளை கண்டறிந்து அவர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென்று காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களுக்கு உரிய அறிவுரைகள் வழங்கியுள்ளார்.
திருச்சி மாநகரத்திற்கு உட்பட்ட பகுதிகளில் சமீப காலங்களில் பொதுமக்களை அச்சுறுத்தி செயின் பறிப்பு மற்றும் செல்போன்களை பிக்பாக்கெட் அடிப்பது போன்ற குற்றச்சம்பவங்களில் ஈடுபட்ட குற்றவாளிகளை கைது செய்து நடவடிக்கை மேற்கொள்ள காவல் ஆய்வாளர்கள் தலைமையில் புலன் விசாரணை செய்து வந்தனர்.
இந்நிலையில், திருச்சி மாநகரத்தில்
செல்போன்களை பிக்பாக்கெட் அடித்துசென்ற சஞ்சீவி, அபுதாகீர், அஜ்மத்அலி ஆகிய எதிரிகள் காந்தி மார்க்கெட் பகுதியிலும், கார்த்தி (எ) பல்லு கார்த்தி, ஜாக்கி (எ) பிரசாந்த், ஜெயசீலன்
ஆகிய எதிரிகள் பாலக்கரை-குட்ஷெட் ரயில்வே மேம்பாலம் மற்றும் கே.கே.நகர் பகுதியிலும், இப்ராஹிம் (எ) இட்லி, சபீர், ஜாபர்சாதிக், காதர் ஆகிய எதிரிகள் கோட்டை பகுதியிலும், லதா, ராமு (எ) ராஜி ஆகிய எதிரிகள் எடமலைப்பட்டிப்புதூர் பகுதியிலும், குணசேகரன் என்ற
எதிரி கண்டோன்மெண்ட் பகுதியிலும் செல்போன்களை பிக்பாக்கெட் அடித்து சென்ற 8 வழக்குகளில் சம்பந்தப்பட்ட 13 எதிரிகளை கைது செய்து, அவர்களிடமிருந்து செல்போன்களை பறிமுதல் செய்தும், பொதுமக்களை அச்சுறுத்தி வந்த சம்மந்தப்பட்ட எதிரிகளை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பொதுமக்களிடம் லிப்ட் கேட்பது போன்று அவர்களை அச்சுறுத்தி செல்போன்களையும், பணத்தையும் பறித்துசென்ற குற்றச் சம்பவங்கள் தொடர்பாக பதிவு செய்யப்பட்ட வழக்குகளில் சிறப்பாக புலன்விசாரணை மேற்கொண்டு, சம்மந்தப்பட்ட எதிரிகளை கைது செய்து, பொதுமக்களிடம் பறித்துசென்ற செல்போன்கள் மற்றும் பணத்தை மீட்டு சிறப்பாக பணியாற்றிய
காவல் ஆய்வாளர்கள், காவல் உதவி ஆய்வாளர்கள் மற்றும் காவல் ஆளிநர்களை திருச்சி மாநகர
காவல் ஆணையர் வெகுவாக பாராட்டினார்.
மேலும், திருச்சி மாநகரில் லிப்ட் கேட்பது போன்று பொதுமக்களை அச்சுறுத்தி செல்போன்களையும், பணத்தையும் பறித்து செல்லும் குற்றச்செயல்களில் ஈடுபடுவோர்கள் மீது சட்டரீதியான கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என திருச்சி மாநகர காவல் ஆணையர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/C5AA6Sjfkat8YKKLO19KD9
#டெலிகிராம் மூலமும் அறிய..
https://t.co/nepIqeLanO