உய்யகொண்டான் ஆற்றில் கழிவுநீர் நுரை, நோய்தொற்று பரவும் அபாயம் :

உய்யகொண்டான் ஆற்றில் கழிவுநீர் நுரை, நோய்தொற்று பரவும் அபாயம் :

சுமார் 1000 ஆண்டுகளுக்கு முன் சோழர்கள் ஆட்சி காலத்தில் விவசாயம் செழித்தோங்கவேண்டும் என்று ராஜராஜசோழன் அவர் பெயரிலேயே உருவாக்கியதுதான் உய்யகொண்டான் வாய்க்கால்.

    இதன் மூலம் சுமார் 1000க்கும் மேற்பட்ட விவசாய நிலங்கள், நீர் நிலைகள், குளங்கள், என பயணடைந்தது விவசாயமும் செழிப்பாக இருந்தது. அப்படி பெயர் பெற்ற உய்யகொண்டான் வாய்க்கால் இன்று கழிவு நீர் செல்லும் சாக்கடையாக மாறிய உள்ளது.

  திருச்சி மாநகரில் உள்ள அநேக கழிவு நீர் சாக்கடைகளும், சில தொழிற்சாலைகளின் கழிவு நீர்களும் இந்த வாய்க்காலில்தான் கலக்கின்றது அது நேராக காவேரி ஆற்றில் கலக்கின்றது இந்துக்கள் "புனிதம்" என்று கருதும் காவிரி ஆற்றில் குளிக்கும் மக்களுக்கு நோய் தொற்று உருவாக அதிக வாய்ப்பு இருப்பதாக பொதுமக்கள் கூறுகின்றனர்.

பெட்டவாய்த்தலையிலிருந்து உற்பத்தியாகும் உய்யக்கொண்டான் வாய்க்கால் திருச்சி மாநகரின் மையப் பகுதிகளுக்குள் செல்கிறது.

 புதுக்கோட்டை மற்றும் மணப்பாறையில் இருந்து வரும் உபரி நீரை சேகரித்து பாய்ந்து செல்லும் நீர் குடமுருட்டி ஆறு என்ற பெயர் பெற்றுள்ளது.

குழுமாயி அம்மன் கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் கோவிலில் அருகே ஆற்றில் இருந்து துர்நாற்றம் வீசுவதாகவும் கழிவுநீர் நுரையாக வெளிவருவதால் தண்ணீரின் நிறமும் அசுத்தமாக காட்சி அளித்துள்ளது.

மே மாதம் 2018 ல் இதேபோன்ற ஒரு சம்பவம் பதிவாகி உள்ளது அதனை தொடர்ந்து ஆய்வு நடத்தப்பட்டது ஆனால் அதனை சரிசெய்வதற்கான எவ்வித தொடர் முயற்சிகளும் செய்யப்படவில்லை.

தொடர்ந்து நுரை வருவதால் ஆற்றில் கலக்கும் கழிவு நீரை அடைக்க சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மாநகராட்சிக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....

https://chat.whatsapp.com/DRORMqDXhcJ0Jtt5Nojgze

#டெலிகிராம் மூலமும் அறிய...

https://t.me/trichyvisionn