புயல் கரையை கடந்த உடன் பொதுமக்கள் உடனடியாக வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது - மத்திய மண்டல ஐஜி பேட்டி!

புயல் கரையை கடந்த உடன் பொதுமக்கள் உடனடியாக வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது - மத்திய மண்டல ஐஜி பேட்டி!

மத்திய மண்டல காவல்துறைத் தலைவர் ஜெயராம் நிவர் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார். 

Advertisement

அப்போது மத்திய மண்டல காவல்துறை தலைவர் ஜெயராம் பேட்டியில்... "நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய இரண்டு மாவட்டங்களில் 205 பகுதிகள் தாழ்வான பகுதிகள் என கண்டறியப்பட்டுள்ளது. அந்த பகுதியில் இருந்து இதுவரை 8500 பேர் பாதுகாப்பு மையங்களுக்கு அழைத்து வந்து அவர்களுக்கு தேவையான உணவு உள்ளிட்ட அடிப்படை வசதிகளை வழங்கி வருவதாக குறிப்பிட்டார்.

மேலும் 2 மாவட்டத்தில் வருவாய்த்துறை, தீயணைப்புத் துறை, வனத்துறை மற்றும் ஊர்க்காவல் படையை சேர்ந்த 400 பேர் தொடர்ந்து பாதுகாப்பு பணியிலும் பொது மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு செல்வதற்கான பணியிலும் ஈடுபட்டு வருகிறார்கள். மீனவ சமுதாயத்தை சேர்ந்த 4000 பேர்கள் காவல்துறையுடன் இணைந்து அவர்களும் மீட்பு நடவடிக்கையில் ஈடுபடும் வகையில் பொது மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 

புயல் கரையை கடந்த உடன் உடனடியாக பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது அவர்கள் பாதுகாப்பாக வீட்டில் இருக்க வேண்டும். பாதுகாப்பான கட்டடங்களிலும் இருக்க வேண்டும். அரசு அறிவித்தவுடன் அவர்கள் வெளியில் வரவேண்டும் என காவல்துறை தலைவர் ஜெயராம் கேட்டுக்கொண்டுள்ளார்.

Advertisement

முன்னதாக நாகை மாவட்டத்தில் தாழ்வான பகுதிகளான சாமந்தன் பேட்டை, செல்லூர் உள்ளிட்ட பகுதிகளை நேரில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஓம்பிரகாஷ் மீனா மற்றும் காவல்துறையினருடன் ஐஜி ஆய்வு செய்து பொதுமக்களிடம் நிவர் புயலுக்கான விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய

https://chat.whatsapp.com/DOwpV9QCMLgL8UqkbAZAxm