விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் மீது மற்றொரு சிறுவன் புல்லட்டை ஏற்றிய பதபதைக்கும் காட்சி

விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் மீது மற்றொரு சிறுவன் புல்லட்டை ஏற்றிய பதபதைக்கும் காட்சி

திருச்சி கொட்டப்பட்டு வெங்கடேஸ்வரா நகரில் உள்ள தெருவில் சிறுவர்கள் விளையாடிக் கொண்டிருந்தனர். தீரன் என்கிற மூன்றரை வயது சிறுவனை அதே பகுதியை சேர்ந்த பத்தாம் வகுப்பு படிக்கும் சிறுவன் புல்லட்டில் அப்பகுதியில் ஓட்டி வந்து இடித்துவிட்டு தீரன் மீது புல்லட்டை ஏற்றி இறக்கி விட்டான்.

அச்சிறுவனை பெற்றோர்கள் வந்து திட்டி சென்ற காட்சிகள் அனைத்தும் சிசிடிவியில் பதிவாகி உள்ளன. இடித்து விட்டு சென்ற புல்லட்டு ஒட்டிய சிறுவனின் தீரன் தந்தை முருகராஜ் திருச்சி கே.கே நகர் காவல் நிலையத்தில் காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது அச்சிறுவன் திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் உள் நோயாளியாக சிகிச்சை பெற்று வருகிறார். 18 வயதுக்கு குறைவான சிறுவர்கள் இருசக்கர வாகனம் ஓட்டக்கூடாது என்பது சட்டம். ஆனால் சட்டத்தை மதித்து நடக்க வேண்டிய காவல்துறை சேர்ந்தவரின் மகன் விளையாட்டி கொண்டிருந்த சிறுவன் மீது புல்லட் ஏற்றி இறக்கும் காட்சி தற்பொழுது சமூக வலைத்தளங்கள் பதவி வருகிறது.

காயமடைந்த சிறுவனுக்கு சிறந்த மருத்துவ சிகிச்சை கிடைத்திடவும் விதிகளை மீறி புல்லட் ஒட்டி விபத்தை ஏற்படுத்திய சிறுவன் மீது மாநகர காவல் ஆணையர் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. 

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/IpuTLRgmGqo0toZpY6O5jW

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision