மாணவர்கள் உயிரிழப்புக்கு திமுக தான் காரணம் - ஏபிவிபி குற்றச்சாட்டு

மாணவர்கள் உயிரிழப்புக்கு திமுக தான் காரணம் - ஏபிவிபி குற்றச்சாட்டு

மகளிருக்கு எதிரான வன்முறைகளை கண்டித்து ஏபிவிபி சார்பில் திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே மேலசிந்தாமணி பகுதியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தென்தமிழக மாநில தலைவர் சுசிலா தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏபிவிபி அமைப்பைச் சேர்ந்த ஏராளமானோர் கலந்துகொண்டு கோஷம் எழுப்பினர். 

ஏபிவிபி தென்தமிழக மாநில தலைவர் சுசிலா வெளியிட்டுள்ள அறிக்கையில்.... அகில பாரதீய வித்யார்த்தி பரிஷத் (ஏபிவிபி) தேசிய மாணவர் அமைப்பு நாடு முழுவதும் பல்வேறு விதமான ஆக்கப்பூர்வமான பணிகளை செய்து வருகிறது. சமீபத்தில் மகளிருக்கான வன்கொடுமைகள் மற்றும் பாலியல் துன்புறுத்தல்கள் அதிகமாக காணப்படுகிறது. ஹைதராபாத்திலும், உத்திரபிரதேசத்திலும் சிறு குழந்தைகள் பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டிருக்கின்றனர். இதனை ஏபிவிபி வன்மையாக கண்டிக்கின்றது.

தொடர்ந்து மகளிரின் மீதான வன்கொடுமைகள் அதிகரித்து காணப்படுகின்றது. மகளிருக்கான உரிய பாதுகாப்பினை உறுதி செய்ய வேண்டும் என வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறது. மகளிருக்கான பாதுகாப்பு முறைகளில் அரசு தனிக்கவனம் செலுத்த வேண்டும். பல்வேறு ஏழை மாணவர்களுக்கு மருத்துவம் படிக்கும் வகையில் நீட் தேர்வு கொண்டு வரப்பட்டுள்ளது. இந்நிலையில் நீட் தேர்வை அனுமதிக்கமாட்டோம். நீட் தேர்வை தமிழகத்தில் எழுத விடமாட்டோம் என்று கூறி தமிழக மாணவர்கள் நலனில் அக்கறை கொள்ளாமல் மாணவர்களை அச்சத்திலும், பயத்திலும் ஆழ்த்திய மாணவ சமுதாய விரோத திமுக அரசை வன்மையாக கண்டிக்கின்றோம்.

தற்போது நீட் தேர்வு நடைபெறுமா, நடைபெறாதா என்ற அச்சதினாலும், பயத்தினாலும், குழப்பத்திலும் மாணவர்கள் உயிரிழந்துள்ளனர். இந்த உயிரிழப்பிற்கு திமுக அரசு தான் காரணம். இந்த உயிரிழப்பிற்கு பிறகு தமிழக சட்டப்பேரவையில் நீட் தேர்விற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர். இந்த தீர்மானத்தை ஏபிவிபி வன்மையாக கண்டிக்கின்றது. இது போன்று தொடர்ந்து மாணவர்களின் எதிர்காலத்தில் திமுக அரசு விளையாடி வருகிறது. அரசு மாணவர்களின் எதிர்காலத்திற்கு தடையாக இருக்க கூடாது என்று குறிப்பிட்டுள்ளது.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/E0iFlLqoEm278rd7rwHdlh

டெலிகிராம் மூலமும் அறிய....
https://t.me/trichyvisionn