VDart நிறுவனம் சார்பில் 3000 பனை விதைகள் நடவு

VDart நிறுவனம் சார்பில் 3000 பனை விதைகள் நடவு

பாரம்பரிய பனை மரங்களை அழிவின் விளிம்பிலிருந்து மீட்டெடுக்கும் முயற்சியாகவும், மண் அரிப்பை தடுக்கும் வகையிலும் பனை விதைகளை நடவு செய்யப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட நவலூர் குட்டப்பட்டு பகுதியில் VDart நிறுவனத்தின் சார்பில் 3000 பனை விதைகள் நடப்பட்டது. 

இதில் நவலூர்குட்பட்டு தலைவர் ஜார்ஜ் பெர்ணான்டஸ், துணைத் தலைவர் கலையரசன், மணிகண்டம் ஒன்றிய கவுன்சிலர் சண்முகம், சமூக ஆர்வலர் சகாயராஜ் ஆகியோர் முன்னிலையில் VDart-ன் பனை விதை திருவிழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் VDart நிறுவனத்தின் நிறுவனர் சித்அகமது தலைமையில் 100க்கும் மேற்பட்ட VDart நிறுவனத்தின் ஊழியர்கள் கலந்து கொண்டு பனை விதைகளை நட்டனர்.

பாரம்பரிய பனை மரங்களை அழிவின் விழிம்பிலிருந்து மீட்டெடுக்கும் முயற்சியாக நடைபெற்ற பனை விதை நடவு பணியில் அப்பகுதி இளைஞர்கள், சிறுவர்கள் ஆர்வமுடன் கலந்துகொண்டனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/IpuTLRgmGqo0toZpY6O5jW

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision