திருச்சியில் 120 கிலோ உணவு சிக்கன் பறிமுதல் - 5 கடைகளுக்கு அபாராதம்
நாமக்கல்லில் ஷவர்மா சாப்பிட்டதில் ஒரு பெண் குழந்தை உயிர் வந்த நிலையில் தமிழகம் முழுவதும் கடந்த இரண்டு நாட்களாக உணவு பாதுகாப்பதில் சோதனை இட்டு வருகின்றனர் திருச்சி மாவட்டம் மணப்பாறை பகுதியில் இன்று உணவு பாதுகாப்பு அலுவலர் டாக்டர் ரமேஷ் பாபு தலைமையில் அதிகாரிகள் மணப்பாறை பகுதியில் உள்ள ஹோட்டல்கள் கடையில ஆய்வு செய்தனர் இதில் 120 கிலோ உணவு மற்றும் சிக்கன்கள் பறிமுதல் செய்து பினாயில் ஊற்றி அழிக்கப்பட்டது.
மேலும் ஐந்து கடைகளுக்கு ரூபாய் 3000 வீதம் அபராதம் விதிக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக உணவு பாதுகாப்பு அலுவலர் டாக்டர் ரமேஷ் பாபு கூறுகையில்.... பொதுமக்கள் உணவு பொருட்களை வாங்கி உண்ணும் பொழுது உணவுப் பொருட்களின் நிறம் சுவை வேறுபாடு இருப்பின் மாவட்ட அலுவலக தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம்.
மேலும் புகார் அளிக்கும் பட்சத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், கடந்த இரண்டு வருடங்களாக 150க்கு மேற்பட்ட நிறுவனர் அபராதமும் 60 நிறுவனங்களுக்கு உணவு பாதுகாப்புத் துறையின் கீழ் கிரிமினல் வழக்கு நடைபெற்று கொண்டுள்ளது. மணப்பாறை பகுதியில் 7 கடையில் ஆய்வு செய்ததற்கு ஐந்து கடைகளில் தலா 3000 வீதம் அபராதமும் ஒரு கடை உணவு உற்பத்திக்கு தடையும் செய்யப்பட்டுள்ளது என தெரிவித்தார்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய.... https://chat.whatsapp.com/D0TGphikme7AsbscoQstiY
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn
https://www.threads.net/@trichy_vision