சிறைவாசிகளுக்கு மனஅமைதிக்கான பயிற்சி, கண் மருத்துவ சிகிச்சை முகாம்
கலைஞர் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு, திருச்சி மத்தியசிறையில் சுமார் 100 சிறைவாசிகளுக்கு மனஅமைதிக்கான விபாசான பயிற்சி தொடர்பான விழிப்புணர்வு முகாம் நடத்தப்பட்டது. இதில் ஓய்வு பெற்ற பேராசிரியர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, திருச்சி மருத்துவர்.பாலசுப்ரமணியம் (இருதய நோய் சிறப்பு நிபுணர்) மற்றும் மருத்துவர்.ராஜீவரதன் (புற்றுநோய் அறுவை சிகிச்சை நிபுணர்) ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பு உரையாற்றினர்.
இதில் மனிதனுடைய மனம் மற்றும் மூளை எவ்வாறு செயல்படுகிறது எனவும், அந்த மனதை நாம் எப்படி கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொள்ளலாம் எனவும், அவ்வாறு மனதை கட்டுப்பாட்டுக்குள் வைத்தால் தீமையான செயல்களிலிருந்து விடுப்பட்டு, குற்றமில்லாத சமூகத்தை உருவாக்க முடியுமென எடுத்துக்கூறி இதற்கு விபாசான தியான பயிற்சி எவ்வாறு உதவுகிறது என்பதை விளக்கிக் கூறி விபாசான தியான பயிற்சிகளை நடத்தி காட்டினார்கள்.
இந்த மருத்துவ விழிப்புணர்வு முகாமில் ம.ஆண்டாள், சிறைக்கண்காணிப்பாளர், மத்தியசிறை, திருச்சி முன்னிலை வகித்தார். மேலும், சிறை மருத்துவர் ராஜ்மோகன், மனஇயல் நிபுணர் வே. சங்கீதா மற்றும் மேலாளர் அ.திருமுருகன் ஆகியோர் பங்கேற்றனர்.
இதனை தொடர்ந்து திருச்சி மத்தியசிறையில் சிறைவாசிகளுக்கான கண் மருத்துவ சிகிச்சை முகாம் நடத்தப்பட்டது. இம்மருத்துவ முகாமை திருச்சி மருத்துவம் மற்றும் சுகாதார பணிகள் இணை இயக்குநர் ஆணையின்படி மணப்பாறை அரசு மருத்துவமனை கண் மருத்துவ சிகிச்சை நிபுணர் ஜமுனா, சிறைவாசிகளுக்கு உரிய மருத்துவ சிகிச்சை அளித்தார்.
இதில் கண்பார்வை குறைபாடு உள்ளவர்கள் மற்றும் முதியோர்கள் உரிய சிகிச்சை பெற்றனர். இம்மருத்துவ முகாமில் சிறைக்கண்காணிப்பாளர் ம.ஆண்டாள் அனைத்து ஏற்பாடுகளையும் செய்திருந்தார். இதில் சிறை மருத்துவர் ராஜ்மோகன், மனஇயல் நிபுணர் வே.சங்கீதா மற்றும் மேலாளர் அ.திருமுருகன் ஆகியோர் பங்கேற்றனர்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய.... https://chat.whatsapp.com/D0TGphikme7AsbscoQstiY
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn
https://www.threads.net/@trichy_vision