மீன்பிடிக்கச் சென்று ஆற்றில் சிக்கிக் கொண்ட நபர்கள் - கயிறு கட்டி பத்திரமாக மீட்ட இளைஞர்கள்.
திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த கண்ணுடையான்பட்டி அருகே மான்பூண்டி ஆற்றின் குறுக்கே தடுப்பணை உள்ளது. அந்த தடுப்பணை அருகே மிதமாகச் சென்ற குறைந்த அளவு நீரில் விராலிமலைப்பகுதியைச் சேர்ந்த 6 பேர் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர்.
இந்நிலையில் திடீரென வெள்ள நீரானது அதிகளவில் ஆர்ப்பரித்து வரவே 6 பேரும் நீரில் சிக்கிச் கொண்டு என்னசெய்வதென்று தெரியாமல் சப்தம் போடவே உடனே கண்ணுடையான் பட்டியைச் சேர்ந்த இளைஞர்கள் உடனே விரைந்து வந்து நீண்ட நேர போராட்டத்திற்கு பின் கயிறு கட்டி அனைவரையும் பத்திரமாக மீட்டு அனுப்பி வைத்தனர்.
இளைஞர்கள் சமயோசிதமாக செயல்பட்டு 6 பேரை காப்பாற்றிய சம்பவம் பாராட்டை பெற்று வருகிறது. திருச்சி மாவட்டம் முழுவதும் தொடர்ந்து இரண்டு நாட்கள் பெய்த மழையால் நீர்நிலைகள் முழுவதும் நிரம்பி காணப்படுகிறது. இதனால் ஆற்றில் குளிக்கவோ, மீன் பிடிக்கவோ, வேடிக்கை பார்க்கவோ செல்லக்கூடாது என மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் அறிவுறுத்தி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/Ge0RgD7SIGiHznfNQgIidr
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision