திருச்சியில் 2 நாட்களாக 100 குடியிருப்புகளை சூழ்ந்த மழைநீர் - மின்சாரம்,குடிநீர் இல்லாமல் தவிப்பு - பொதுமக்கள் சாலை மறியல்.

திருச்சியில் 2 நாட்களாக 100 குடியிருப்புகளை சூழ்ந்த மழைநீர் - மின்சாரம்,குடிநீர் இல்லாமல் தவிப்பு - பொதுமக்கள் சாலை மறியல்.

திருச்சியில் இரண்டு நாட்களாக பெய்த தொடர் கனமழையால் எடமலைப்பட்டி புதூர் கொல்லங்குளம் நிரம்பி கருமண்டபம் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புகள், வங்கி, எல்ஐசி உள்ளிட்ட தனியார் நிறுவனங்களை மழை நீர் சூழ்ந்தது. நூற்றுக்கணக்கான அடுக்குமாடி குடியிருப்புகளில தரைத்தளம் இரண்டு நாட்களாக மழை நீர் முழுவதும் தேங்கியுள்ளது.

மின்சாரம் துண்டிக்கப்பட்டு குடிநீர் கிடைக்காமல் அங்கு வசிப்பவர்கள் அவதியுற்று வந்தனர். வயதானவர்கள், குழந்தைகள் வெளியில் வர முடியாத நிலையில் தவித்தனர். இந்நிலையில் நேற்று மாவட்ட ஆட்சியர், மாநகராட்சி அதிகாரிகள் உள்ளிட்டோரிடம் முறையிட்டனர். திருச்சி - திண்டுக்கல் நெடுஞ்சாலையில் கருமண்டபம் தேசியக் கல்லூரிக்கு முன்னதாக மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது.

இதனால் பொதுமக்களும், வாகன ஓட்டிகள் சிரமம் அடைந்தனர். இதனால் அப்பகுதி மக்கள் திருச்சி - திண்டுக்கல் நெடுஞ்சாலை கருமண்டபம் பகுதியில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதைப்பற்றி தகவலறிந்த வந்த காவல்துறையினர் அவர்களை சமாதானப்படுத்தி போராட்டத்தை கைவிட வைத்தனர். இதனால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

பின்னர் மாநகராட்சி உதவி ஆணையர், உடனடியாக மழை நீரை வடிவதற்கான நடவடிக்கையை மேற்கொண்டார். மிக முக்கியமாக அந்த சாலையில் தேங்கிய நீர் அருகாமையில் உள்ள தேசியக் கல்லூரி உள்ளே வடிகால் வாய்க்காலில் சென்று வடிய வேண்டும். அந்தப் பகுதி அடைக்கப்பட்டதால் சாலையிலும், குடியிருப்பு பகுதியிலும் இரண்டு நாட்களாக மழை நீர் தேங்கி சூழ்ந்தது.

இந்நிலையில் தற்பொழுது அந்த சிமெண்ட் கட்டைகளை உடைத்து மழை நீர் வடிவதற்கான வழிகளை மாநகராட்சி உதவி ஆணையர் ஏற்படுத்தினார். தகவலறிந்த மாவட்ட வருவாய் அதிகாரி ராஜலட்சுமி நேரில் வந்து பார்வையிட்டு பொதுமக்களிடம் குறைகளை கேட்டு அறிந்தார். தற்பொழுது மோட்டார் மூலமாகவும் மழை நீர் வெளியேற்றப்படுகிறது.

போக்குவரத்து பிரிவு காவல்துறை வாகனங்களை நெரில் சிக்காமல் அனுப்பி வைத்து வருகின்றனர். சாலையில் மழை நீர் வடியாமல் உள்ளது. விரைவாக வெளியேற்ற ஒரு புறம் மோட்டாரை வைத்து வெளியேற்றியும், மறுபுறம் வடிகாலுக்கான பாதையை உடைத்து மழைநீரை வெளியேற்றும் பணியிலும் மாநகராட்சி அதிகாரிகள் பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/Ge0RgD7SIGiHznfNQgIidr

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision