புவி வெப்பமயமாதலை தடுக்க இரண்டு மாதங்களில் 2124 மரக்கன்றுகளை நட்டுள்ள திருச்சி மாநகராட்சி
புவி வெப்பமயமாதல் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சூழலில் பொதுமக்கள் இயற்கை வளங்களை மிக அதிக அளவில் பயன்படுத்துவது காரணமாக அமைகின்றது. புவி வெப்பமயமாதலை தடுக்கும் பொருட்டு மரக்கன்றுகளை நடுதல் தவிர நம்மால் வேறு எதையும் தற்போது செய்ய இயலாது. இயற்கையைக் காக்கும் வழிகளில் ஒன்று தான் மரங்கள் நடுதல். எனவே திருச்சி பகுதியில் மாநகராட்சியால் கிட்டத்தட்ட இரண்டு மாதங்களில் 2,124 மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன.
மரக்கன்றுகளை கால்நடைகள் சேதப்படுத்திடாமல் இருக்க கூண்டுகள் அமைத்து பராமரிக்கவும் செய்து வருகின்றனர். மாநகராட்சியின் இச்செயல் பொதுமக்களிடையே நல்ல வரவேற்பு பெற்றுள்ளது. சாலை ஓரங்களில் மரக்கன்றுகளை நட்டு வைத்து பராமரிக்கும் மாநகராட்சி மின்வாரிய துறையினரால் வெட்டப்படும் மரங்களை சாலைகளில் அப்படியே வெட்டி வீசி விடுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
பருவ மழை தொடங்கியது தொடர்ந்து பாதிப்பு ஏற்படாத வண்ணம் இருப்பதற்காக சாலையோரத்தில் வளர்ந்துள்ள மரங்களின் கிளைகளை மின்வாரிய துறையினரால் வெட்டப்பட்டு வருகின்றன. ஆனால் வெட்டப்படும் மரக்கன்றுகள் மரக்கிளைகளை அப்படியே போட்டு செல்கின்றனர். தூய்மைப் பணியாளர்களுக்கு இது பெரும் சிரமமாக இருக்கிறது. எனவே இதுபோன்ற சிக்கல்களை எதிர்கொள்ள முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளனர்.
இது குறித்து மாநகராட்சி அதிகாரிகள் தெரிவிக்கையில்... இதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும். பசுமை பரப்பை அதிகரிப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருவதாகவும், இன்னும் கூடுதலாக 2 ஆயிரம் மரக்கன்றுகள் நகரம் முழுவதும் நடப்படும் என்றும் தெரிவித்துள்ளனர்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/Efyz91DMUiEK0NHbCDuGqJ
டெலிகிராம் மூலமும் அறிய....
https://t.me/trichyvisionn