திருச்சியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் சாலை மறியல் போராட்டம் - 120 பேர் கைது!

திருச்சியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் சாலை மறியல் போராட்டம் - 120 பேர் கைது!

திருச்சி தெப்பக்குளம் தபால் நிலையம் அருகே இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கொரோனா ஊரடங்கில் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் தரைக்கடை வியாபாரிகளுக்கு பத்தாயிரம் ரூபாய் ஸ்வான் நிதி வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்தும் வழங்காததை கண்டித்தும் மறியல் போராட்டம் நடைபெற்றது.

முன்னதாக சாலை மறியல் போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள் கோட்டைவாசல் உள்ளே இருந்து ஊர்வலமாக வந்து தெப்பக்குளம் தபால் நிலையம் முன்னதாக சாலையில் அமர்ந்து போராட்டம் நடத்தினர். சிலர் படுத்தும் தொடர் போராட்டத்தை நடத்தினர்.

Advertisement

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மத்திய அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.பின்னர் போராட்டத்தில் கலந்துகொண்ட பெண்கள் உள்ளிட்ட 120க்கும் மேற்பட்ரோரை போலீசார் கைது செய்தனர்.