திருச்சி விமான நிலையத்தை சுற்றி டிரோன் கேமரா இயக்க தடை சாலைகளில் எச்சரிக்கை சுவரொட்டி

திருச்சி விமான நிலையத்தை சுற்றி டிரோன் கேமரா இயக்க தடை சாலைகளில் எச்சரிக்கை சுவரொட்டி

திருச்சி விமான நிலையத்தை சுற்றி 3 கிலோ மீட்டர் சுற்றளவுக்கு டிரோன் கேமரா இயக்க தடவை விதிக்கப்பட்டிருப்பது குறித்து பொதுமக்களுக்கு எச்சரிக்கை சுவரொட்டி ஒட்டப்பட்டுள்ளது. திருச்சி விமான நிலையத்தின் பாதுகாப்பு மற்றும் விரிவாக்கம் குறித்த குழு உறுப்பினர்கள் கூட்டம் கடந்த மாதம் நடைபெற்றது.

அப்போது திருச்சி விமான நிலைய சுற்றுப்பகுதியில் 3 கிலோமீட்டர் சுற்றளவுக்கு ட்ரோன் கேமரா பறக்க தடை விதிக்க முடிவு செய்யப்பட்டது. மேலும் இது பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்தவும், ட்ரோன் கண்காணிப்பு தொழில்நுட்பத்தை மேம்படுத்துவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

இதனையடுத்து விமான நிலைய ஆணையம் குழுமம் சார்பில் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் விமான நிலையத்தைச் சுற்றி 3 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சுற்றுவட்டாரப் பகுதிகளில் சாலையோரங்களிலும், வீதிகளிலும் சுவரொட்டி ஒட்டப்பட்டுள்ளது.

விமான நிலையத்தை சுற்றி 3 கிலோ மீட்டர் சுற்றளவில் டிரோன் இயக்க அனுமதி இல்லை மீறி இயக்கினால் தண்டனைக்குரிய செயல் என குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் டிரோன் இயக்கத்தை 24 மணி நேரமும் கண்காணிக்க விமானநிலைய குழு தலைவரும், திருச்சி மாநகர காவல் ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/C7dWGn2D61ELFrwqksYgdS

டெலிகிராம் மூலமும் அறிய....
https://t.me/trichyvisionn