திருச்சி படைக்கல தொழிற்சாலயில் 2 புதிய அதிநவீன துப்பாக்கி அறிமுகம்

திருச்சி படைக்கல தொழிற்சாலயில் 2 புதிய அதிநவீன துப்பாக்கி அறிமுகம்

25 ஆகஸ்ட் 2021 அன்று 7.62x39 ' திருச்சி அசால்ட் ரைபிள் - ன் கீழ் மடிப்பு பட் ( TAR -Down Folding Butt ) பதிப்பை அறிமுகப்படுத்தியது. தற்போது திருச்சியிள்ள படைக்கல தொழிற்சாலை நிலையான பட் ( Fixed Butt ) மற்றும் பக்க மடிப்பு பட் ( Side Folding Butt ) ஆகிய இரண்டு வகைகளில் திருச்சி அசால்ட் ரைபிள் ( TAR ) தயாரித்து வருகிறது. 7.62x39 மிமீ திருச்சி அசால்ட் ரைபிள் ( TAR ) ஒரு சக்தி வாய்ந்த தனிப்பட்ட தானியங்கி ஆயுதம் ஆகும். இது ஒற்றை மற்றும் தானியங்கி துப்பாக்கி சூடு முறையில் எதிரிகளை அழிக்க வடிவமைக்கப்பட்டுள்ளது.

இது சாதாரண முறையில் ஒற்றை ஷாட் ரைபிள் ஆகும். மேலும் இதனை பர்ஸ்ட் மோடிலும் பயன்படுத்தப்படலாம். குறுகிய தொடர் முறையில் பயன்படுத்துவதன் மூலம் 500 மீ வரையில் உள்ள குழு அல்லது ஒற்றை இலக்குகளை அழிக்க முடியும். இருப்பினும். TAR இன் அழிவு விளைவு 1350 மீ வரம்பில் உள்ளது.

சில சிஏபிஎஃப் பிரிவுகள், மாநில காவல்துறை மற்றும் ஆர்பிஎஃப் காவலர் மற்றும் ரோந்து பணியில் உள்ள வீரர்களின் விரைவான மற்றும் எளிமையான இயக்கத்திற்கு டவுன் மடிப்பு பட் பதிப்பு ( Down Folding Butt ) தேவைப்படுவதால் படைக்கல தொழிற்சாலை திருச்சி TAR கீழ் மடிப்பு பட் ( Down Folding Butt ) பதிப்பை தயாரித்துள்ளது.

TAR- கீழ் மடிப்பு பட்டின் ( Down Folding Butt ) ஒட்டுமொத்த நீளம் பட் திறந்த ( Open Butt ) நிலையில் 900 மிமீ மற்றும் பட் மடிப்பு ( folded Butt ) நிலையில் 650 மிமீ ஆகும் 7.52x39 மிமீ திருச்சி அசால்ட் ரைபிள் - ன் கீழ் மடிப்பு பட் பதிப்பு திருச்சி படைக்கல தொழிற்சாலை பொது மேலாளர் சஞ்சய் திவேதி IOFS அறிமுகப்படுத்தினார். ராஜிவ் ஜெயின், IOFS , கூடுதல் பொது மேலாளர் ஏ.கே.சிங் , IOFS , கூடுதல் பொது மேலாளர் வி.குணசேகரன், IOFS , இணை பொது மேலாளர் கிருஷ்ணசாமி IOFS, இணை பொது மேலாளர் மற்றும் OFT இன் பிற அதிகாரிகள் விழாவில் கலந்து கொண்டனர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/C7dWGn2D61ELFrwqksYgdS

டெலிகிராம் மூலமும் அறிய....
https://t.me/trichyvisionn