தமிழக முதல்வர் லாவண்யா விவகாரத்தில் பாஜகவை விமர்சித்தது நியாமில்லை என பாஜக தமிழக தலைவர் திருச்சியில் பேட்டி
பாரதிய ஜனதா கட்சியின் தமிழக தலைவர் அண்ணாமலை திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர் லாவண்யா இல்லத்தில் பெற்றோர்களை இன்று(30.01.2022) சந்தித்து 10லட்சம் காணிக்கையாக கொடுத்துள்ளோம்.
பாஜக உண்மை கண்டறியும் குழு நாளை மறுநாள் அரியலூர் வருகிறார்கள்.இறந்த லாவண்யா பெற்றோர்கள் குடும்பத்தினர் மீது அவதூறு பரப்புவதாக என்னிடம் தெரிவித்துள்ளார்ள்.
தமிழக முதல்வர் லாவண்யா மரணம் தொடர்பாக பாஜவை விமர்சனம் செய்ததது உண்மையாலும் சட்டம் ஒழுங்கு சீர்குலைக்க செய்வது நாங்களா முதல்வரா என கேள்வி எழுப்பினார்.வழக்கு விசாரணையில் இருக்கும் போது முதல்வர் இப்படி பேசுவது நியாமில்லை என்றார்.தமிழக காவல்துறை அழுத்ததில் உள்ளது. நகர்புற உள்ளாட்சி தேர்தல் குறித்து இருகட்சிகளுக்கும் பாதகமில்லாமல் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம்.இன்று இரவுக்குள் நகர்புற உள்ளாட்சி தேர்தல் கூட்டணி பேச்சுவார்த்தை முடிந்து இறுதி வடிவம் பெற்று அறிவிப்பு வெளியாகும்.
கிறிஸ்துவ பெண் இறந்து இருந்தாலும் பாஜக கேள்வி கேட்கும்.எந்த மதத்தை சேர்ந்தவர்களுக்கும் கட்டாய மதமாற்ற பிரச்சினை வந்தால் பாஜக குரல் கொடுக்கும் என்றார். பேட்டியின்போது முன்னாள் எம்பி சிபி ராதாகிருஷ்ணன், பாரதிய ஜனதா கட்சி தேசிய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன் உள்ளிட்ட மாவட்ட நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/FrMhB48CtP5DIvpG3AUAT0
#டெலிகிராம் மூலமும் அறிய...
https://t.me/trichyvisionn