ஸ்ரீரங்கம் கோயிலுக்கு சொந்தமான மதில் சுவரிலிருந்து தவறி விழுந்து ஒருவர் பலி
திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலுக்கு சொந்தமான தெற்கு சித்திரை வீதியில் உள்ள மதில் சுவரில் பராமரிப்புப் பணி ஒரு மாதத்திற்கு மேலாக நடைபெற்று வருகிறது இந்தப் பணியில் பத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்று மாலை பராமரிப்புப் பணியில் ஈடுபட்டிருந்த தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் சோழபுரத்தை சேர்ந்த வாசுதேவன் (47) என்ற தொழிலாளி, மதில் சுவர் மேல் இருந்து தவறி விழுந்தார். இதில் தலையில் பலத்த அடி விழுந்ததால் அவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.
இதுபற்றி தகவல் அறிந்து வந்த ஸ்ரீரங்கம் போலீசார் வாசுதேவன் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக திருச்சி அரசு மருத்துவமனை அனுப்பிவைத்தனர் மேலும் தொழிலாளி உயிரிழந்த குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/FrMhB48CtP5DIvpG3AUAT0
#டெலிகிராம் மூலமும் அறிய...
https://t.me/trichyvisionn