திருச்சி மாநகரில் நேற்று(26.09.2022) பெய்த மழை அளவு விவரம்
திருச்சியில் கடந்த ஒரு வாரமாக பகல் முழுவதும் வெயில் வாட்டி வதைத்தது. இந்தநிலையில் நேற்று முன்தினம் பகலில் வெயில் கொளுத்திய நிலையில் மாலையில் திடீரென கருமேக கூட்டங்கள் வானில் திரண்டு ஆங்காங்கே சாரல் மழை பெய்தது. பின்னர் நள்ளிரவு 12.30 மணிக்கு மேல் தொடங்கிய மழை விடிய விடிய பெய்ததோடு காலை 7 மணி வரை நீடித்தது.
நள்ளிரவில் திடீரென மேக வெடிப்பு ஏற்பட்டதுபோல் இடி, மின்னலுடன் 5 மணி நேரத்துக்கும் மேல் கொட்டித்தீர்த்த இந்த மழையால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து வெள்ளம் போல் ஓடியது. கல்லக்குடி9.40 மில்லி மீட்டர் புள்ளம்பாடி 5. 40 மி.மீட்டர் தேவமங்கலம் 5.40 மில்லி மீட்டர் வாத்தலை அணைக்கட்டு 7.20 மில்லி மீட்டர் பொன்னையாறு டேம் 13 மில்லி மீட்டர் கோவில்பட்டி 5:20 மில்லி மீட்டர் ,முசிறி 7 மில்லி மீட்டர் துறையூர் 1 மில்லிமீட்டர், திருச்சி ஏர்போர்ட் 8.40 மில்லிமீட்டர் மழை அளவு பதிவானது. மாவட்டம் முழுவதும் மொத்தம் 61.80 மில்லி மீட்டர் மழை பதிவானது.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய... https://chat.whatsapp.com/DV3MG0TGN9x0CYy54GyO6a
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.co/nepIqeLanO