மயங்கி விழுந்த 4 வயது சிறுமி பரிதாபமாக உயிரிழப்பு
ஆந்திரா மாநிலம் கிருஷ்ணா மாவட்டத்தை சேர்ந்தவர் தம்மிசெட்டிசிவா (24). இவர் குடும்பத்துடன் திருச்சி சஞ்சீவி நகர் பகுதியில் கடந்த இரண்டு மாதமாக தங்கி துப்பாக்கி தொழிற்சாலை கட்டளை வாய்க்கால் கரைப்பகுதியில் குழாய் பதிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார்.
இந்த நிலையில் நேற்று திடீரென அவரது மகள் மாதுரி (4) அந்தப் பகுதியில் விளையாடி கொண்டிருந்த பொழுது வலிப்பு நோய் வந்து மயங்கி விழுந்துள்ளார். பின்னர் மாதுரியை துவாக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு மாதுரிக்கு முதல் கட்ட சிகிச்சை அளிக்கப்பட்டது பின்னர் மேற்சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.
அங்கு சிகிச்சையில இருந்த மாதுரி சிகிச்சை பலனில்லாமல் பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து தம்மிசெட்டிசிவா நவல்பட்டு காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன் அடிப்படையில் நவல்பட்டு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/Ge0RgD7SIGiHznfNQgIidr
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision