உள்ளாட்சி தேர்தல் நடத்த தமிழ்நாடு ஊராட்சி பிரதிநிதிகள் கூட்டமைப்பு கோரிக்கை

உள்ளாட்சி தேர்தல் நடத்த தமிழ்நாடு ஊராட்சி பிரதிநிதிகள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு ஊராட்சி பிரதிநிதிகள் கூட்டமைப்பு சார்பில் திருச்சி மாவட்ட ஆட்சியரிடம் அளிக்கப்பட்ட மனுவில்...... கடந்த 2019 ஆம் ஆண்டு, தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தின் சட்டப்பூர்வ ஆணையின்படி, ஊரக உள்ளாட்சித் தேர்தல்களுக்கான பொது அறிவிப்பு, (09.12.2019) அன்று உரிய மாவட்ட அரசிதழ்களில் வெளியிடப்பட்டது. ஆனால் இந்த ஆண்டு, சம்பந்தப்பட்ட 27 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சித் தேர்தல்கள் குறித்து இதுவரை எந்த பொது அறிவிப்பும் மாநில தேர்தல் ஆணையத்தால் வெளியிடப்படவில்லை.

இந்திய அரசியல் அமைப்புச் சட்டப்பிரிவு 243E(3)(a), ஊரக உள்ளாட்சிகளின் பதவிக்காலமான 5 ஆண்டுகள் முடியும் முன்பு. அவற்றுக்கானத் தேர்தல் நடத்தி முடிப்பதை கட்டாயமாக்கியுள்ளது. இந்தக் கடப்பாடு, இந்திய அரசியல் அமைப்புச் சட்டப்பிரிவு 243K-இன் LIQ, மாநிலத் தேர்தல் ஆணையங்களுக்கு உரியது.

எகிர்பாராத வெள்ளம், பூகம்பம் போன்ற இயற்கைப் பேரிடர்கள் அல்லது மாநிலத்தில் நிலவும் அதி அவசர குழல் போன்ற அசாதாரண உண்மைக் காரணங்கள் தவிர்த்து, வேறெந்த காரணத்திற்காகவும் 243E பிரிவைக் கடைபிடிக்காமல் இருக்கக்கூடாது என்பது உச்சநீதிமன்றம் (W.P (C) No. 719/95 (Supreme Court of India, 1997) மற்றும் பல்வேறு உயர்நீதிமன்றம் தீர்ப்புகள் நிறுவியுள்ளச் சட்ட நிலைப்பாடு, அரசியல் அமைப்புச் சட்டப்பிரிவு 243E(3)(a)-ஜ கடைபிடிக்காமல் இருப்பது, இந்திய அரசியலமைப்புச் சட்டக்கிற்கு முற்றிலும் எதிரானது.

கடந்த 2016 ஆம் ஆண்டில் உள்ளாட்சித் தேர்தல்கள் நடைபெறாததால் மக்கள் பல இன்னல்களைச் சந்தித்தார்கள். உள்ளாட்சித் தேர்தல்கள் உரிய காலத்தில் நடைபெறாமல் இருந்து விடுமோ, தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளின் நிர்வாகத்திற்கு மாற்றாக, தனி அலுவலர் நிர்வாக முறை மீண்டும் அமைந்து விடுமோ என்ற அச்சம் பொதுமக்கள் மனதில் நிலவி வருவதை தங்கள் கவனத்திற்கு கொண்டு வரக் கடமைப்பட்டுள்ளோம்.

எனவே, திருச்சிராப்பள்ளி உள்ளிட்ட ஊரக உள்ளாட்சிகளின் பதவிக்காலம் முடிவடைய இருக்கும் 27 மாவட்டங்களில், வரும் ஜனவரி மாத இறுதிக்குள் உள்ளாட்சித் தேர்தல்கள் நடத்தி முடித்திட, உரிய, துரித நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென்ற கோரிக்கையை தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் மற்றும் தமிழ்நாடு அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லுமாறு மாவட்ட நிர்வாகத்தைக் கேட்டுக் கொள்கிறோம்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/Ge0RgD7SIGiHznfNQgIidr

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision