இறந்தவரின் உடலை குளிர்சாதனப் பெட்டியில் வைத்த போது மின்சாரம் தாக்கி வாலிபர் பலி

Nov 23, 2022 - 23:09
 1724
இறந்தவரின் உடலை குளிர்சாதனப் பெட்டியில் வைத்த போது மின்சாரம் தாக்கி வாலிபர் பலி

திருச்சி நம்பர் ஒன் டோல்கேட் அருகே உள்ள கூத்தூர் பகுதியை சேர்ந்தவர் செல்வமணி இவரது மகன் ஐயப்பன் (22). கூலித் தொழிலாளியான இவர் தனது வீட்டிற்கு அருகில் துக்கும் நிகழ்ச்சிக்கு சென்றார். அப்போது இறந்தவர் உடலை வைப்பதற்காக கொண்டுவரப்பட்ட மின் குளிர்சாதன பெட்டிக்கு மின் இணைப்பு கொடுக்க முயன்ற போது அவர் மீதும் அருகில் இருந்த இரண்டு பேர் மீதும் மின்சாரம் பாய்ந்தது.

இதில் ஐயப்பன் மீது அதிக மின்சாரம் பாய்ந்ததில் அவர் தூக்கி வீசப்பட்டு கீழே விழுந்து மயங்கினார். மற்ற இரண்டு பேர் லேசான அதிர்வு ஏற்பட்டு அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இதை கண்ட அங்கிருந்தவர்கள் மயங்கி விழுந்த ஐயப்பனை மீட்டு சிகிச்சைக்காக திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு பரிசோதித்த மருத்துவர் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினார்.

இது குறித்த தகவல் அறிந்த கொள்ளிடம் போலீசார் சம்பவத்திற்கு சென்று ஐயப்பன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய.... https://chat.whatsapp.com/LQQVzK3j420HuvITMlwYIH           

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.co/nepIqeLanO