திருச்சி மாநகரில் நாளை மறுநாள் (19.12.2024) மின் நிறுத்தம் செய்யப்படும் பகுதிகள்
110/33-11 கி.வோ. தென்னூர் துணை மின் நிலையத்தில் நாளை மறுநாள் 19.12.2024 (வியாழக்கிழமை) அன்று பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. இதனால் இந்த துணை மின் நிலையத்தில் இருந்து மின்விநியோகம் பெறும் தில்லைநகர் கிழக்கு மற்றும் மேற்கு விஸ்தரிப்பு அனைத்து பகுதிகள்,
காந்திபுரம், அண்ணாமலைநகர், கரூர்பைபாஸ்ரோடு, தேவர்காலணி, தென்னுர்ஹைரோடு, அண்ணாநகர் கிழக்கு மற்றும் மேற்கு பகுதிகள், புதுமாரியம்மன் கோவில்தெரு, சாஸ்திரிரோடு, ரஹ்மானியபுரம், சேஷபுரம், ராமராயர் அக்ரஹாரம், வடவூர், விநாயகபுரம், வாமடம், ஜீவாநகர், மதுரைரோடு, கல்யாணசுந்தரபுரம், வள்ளுவர்நகர், நத்தர்ஷா பள்ளிவாசல், பழையகுட்செட் ரோடு, மேலபுலிவார்டு ரோடு,
ஜலால்பக்கிரிதெரு, ஜலால்குதிரிதெரு, குப்பாங்குளம், ஜாபர்ஷாதெரு, பெரியகடைவீதி, சூப்பர் பஜார், சிங்கார தோப்பு, பாபு ரோடு, மதுரம் மைதானம், பாரதியார் தெரு, சுண்ணாம்புக்காரத்தெரு, சந்துக்கடை, கள்ளத்தெரு, அல்லிமால்தெரு, கிலேதார்தெரு, சப்ஜெயில்ரோடு, பாரதிநகர், இதாயத்நகர்,
காயிதே மில்லத்சாலை, பெரியசெட்டிதெரு, சின்னசெட்டிதெரு, பெரியகம்மாள தெரு, சின்னகம்மாள தெரு, மரக்கடை, பழைய பாஸ்போர்ட் ஆபிஸ், வெல்லமண்டி, காந்திமார்கெட், தஞ்சைரோடு, கல்மந்தை, கூனிபஜார் ஆகிய பகுதிகளில் நாளை மறுநாள் 19.12.2024 (வியாழக்கிழமை) அன்று காலை 09:45 மணி முதல் மாலை 04:00 மணி வரை மின் வினியோகம் இருக்காது.
33/11 கி.வோ. வரகனேரி துணை மின் நிலையத்திலிருந்து மின்வினியோகம் பெறும் மகாலெட்சுமிநகர், தனரெத்தினம் நகர், வெல்டர்ஸ் நகர், தாராநல்லூர், A.P. நகர், விஸ்வாஸ் நகர், வசந்த நகர், அலங்கநாதபுரம், வீரமாநகரம், பூக்கொல்லை, காமராஜர் நகர், செக்கடிபஜார், பாரதிநகர், கலைஞர் நகர், ஆறுமுகா கார்டன், P.S. நகர், பைபாஸ் ரோடு, வரகனேரி, பெரியார் நகர், பிச்சைநகர், அருளாணந்தபுரம்,
அன்னைநகர், மல்லிகைபுரம், படையாச்சிதெரு, தர்மநாதபுரம், கல்லூக்காரத்தெரு, கான்மியான் மேட்டுத்தெரு, துரைசாமிபுரம், கீழ்புதூர், இருதயபுரம், குழுமிக்கரை, மரியம்நகர், சங்கிலியாண்டபுரம், பாரதிதெரு, வள்ளுவர் நகர், ஆட்டுக்காரதெரு, அண்ணாநகர், மணல்வாரித்துறை ரோடு, இளங்கோ தெரு, காந்திதெரு, பாத்திமா தெரு, பெரியபாளையம், பிள்ளைமாநகர், பென்சினார் தெரு, எடத்தெரு, முஸ்லீம் தெரு, ஆனந்தபுரம், நித்தியானந்தம்புரம்,
பருப்புக்கார தெரு, சன்னதி தெரு மற்றும் பஜனை கூடத்தெரு ஆகிய பகுதியில் நாளை மறுநாள் (19.12.2024) (வியாழக்கிழமை) அன்று காலை 09:45 மணி முதல் மாலை 04:00 மணி வரை மின் விநியோகம் இருக்காது என்று தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம், இயக்கலும் & காத்தலும், திருச்சி நகரியம், தென்னூர் செயற்பொறியாளர், பொறிஞர் K.A. முத்துராமன், தெரிவித்துள்ளார். மின் தடை புகார்களுக்கு 94987 94987 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/Ge0RgD7SIGiHznfNQgIidr
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision