திருச்சி மாநகரில் சுகாதார பணிகள் குறித்து மேயர் ஆய்வு.
திருச்சியில் கடந்த சில தினங்களாக பெய்த தொடர் மழை காரணமாக மாநகரில் பல்வேறு பகுதிகளில் மழை நீர் தேங்கி இருந்தது. இதனை திருச்சி மாநகராட்சி பணியாளர்கள் மூலம் மழை நீரை உடனடியாக அகற்றி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் இன்று திருச்சி தில்லைநகர் 22-வது வார்டு பகுதிகளில் சுகாதாரப் பணிகள் குறித்து மாநகரா மேயர் அன்பழகன் இன்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது இன்னும் தாழ்வான பகுதிகளில் தேங்கியிருக்கும் மழை நீரை உடனடியாக அகற்றவும் நோய் தொற்று பரவாமல் இருக்க சுகாதாரப் பணிகளை மேற்கொள்ளவும் மாநகராட்சி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
முன்னதாக மண்டலம் எண்,4 வார்டு எண் 56 வது பகுதி பொதுமக்களுக்கு சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. இந்த ஆய்வின்போது செயற்பொறியாளர் செண்ணு கிருஷ்ணன், உதவி செயற்பொறியாளர் இப்ராஹிம், கோட்டத் தலைவர் விஜயலட்சுமி கண்ணன், மாமன்ற உறுப்பினர் விஜயலட்சுமி உள்ளிட்ட மாநகராட்சி அதிகாரிகள் உடன் இருந்தனர்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/Ge0RgD7SIGiHznfNQgIidr
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision