யானை தந்தத்தாலான பரிசு பொருட்களை சட்டவிரோதமாக விற்பனை - திருச்சி மாவட்ட ஆயுதப்படை உதவி ஆய்வாளர் கைது

யானை தந்தத்தாலான பரிசு பொருட்களை சட்டவிரோதமாக விற்பனை - திருச்சி மாவட்ட ஆயுதப்படை உதவி ஆய்வாளர் கைது

விழுப்புரம் வன சரக அதிகாரிகளுக்கு கிடைத்த ரகசிய தகவலின் படி யானை தந்தத்தாலான பரிசு பொருட்களை சட்டவிரோதமாக விற்பனை செய்து வந்த எதிரிகளை துப்பு வைத்து பிடித்தும், விழுப்புரம் வன சரகத்தின் (Forest) WLOR No.07/24, U/s 39(1) (b) (d) (5), 40 (1), (2), (2a), (2b), 42, 43, 44, 48, 48A. 49, 49A, 49B, 49C, 50, 52, 56, 57 The Wild Life (Protection) Act 1972 - 1 கடந்த (14.11.2024)-ம் தேதி வழக்கு பதிவு செய்து விசாரணை செய்யப்பட்டது.

இதில் எதிரிகள் கொடுத்த ஒப்புதல் வாக்குமூலத்தில் திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆயுதப்படை உதவி ஆய்வாளர் மணிவண்ணனுக்கு தொடர்பு இருப்பது தெரியவரவே அவரை மேற்படி வழக்கில் 13-வது எதிரியாக சேர்க்கப்பட்டார்.

மேற்படி குற்ற சம்பவத்தில் உதவி ஆய்வாளர் மணிவண்ணன் (50) மேற்படி யானை தந்தத்தாலான பரிசு பொருட்களை அவரது உறவினரிடம் இருந்து பெற்று எதிரிகள் மூலம் சட்டவிரோதமாக விற்பனை செய்துள்ளார் என்பது எதிரிகளின் வாக்குமூலத்தின் மூலம் தெரிய வந்ததன் காரணமாக திருச்சி காவல் சரகம் ஆணை 6.418/2024. C.No.B1/8094/2024-ன் படி கடந்த (25.11.2024)-ஆம் தேதி தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டார்.

இந்நிலையில், கடந்த (14.12.2024)-ஆம் தேதி மேற்படி வழக்கில் தொடர்புடையதாக கூறப்படும் உதவி ஆய்வாளர் மணிவண்ணனுக்கு விழுப்புரம் வன சரகத்தின் WLOR No.7/24-ன்கீழ் மேற்படி வழக்கு விசாரணைக்கு ஆஜராக அழைப்பணை வழங்கப்பட்டும். அதன்பேரில் (16.12.2024) காலை 10:30 மணிக்கு விழுப்புரம் வன சரக அலுவலகத்தில் ஆஜரானார்.

இவரிடம் விழுப்புரம் வன சரக அதிகாரிகள் மேற்படி வழக்கு தொடர்பாக மணிவண்ணனிடம் விசாரணை மேற்கொண்டபோது அவ்வழக்கில் தொடர்புடையவர் என் உறுதி செய்யப்பட்டதால், விழுப்புரம் வன சரக அதிகாரிகள் மேற்படி மணிவண்ணனை கைது செய்து விழுப்புரம் நீதிமன்றத்தில் ஆஜர் செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டார்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/Ge0RgD7SIGiHznfNQgIidr

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision