சோமரசம்பேட்டையில் ஏஐடியுசி சங்கம் சாலை மறியல் போராட்டம்

சோமரசம்பேட்டையில் ஏஐடியுசி சங்கம் சாலை மறியல் போராட்டம்

ஏஐடியுசி சங்கம் சார்பில் மாநிலம் முழுவதும் தொழிலாளர் சட்டங்களை பாதுகாக்க வேண்டும், நல வாரியத்தில் வழங்கப்படும் நிதி பலன்களை உயர்த்தி வழங்க வேண்டும், உள்ளாட்சி பணியாளர்களை நிரந்தரப்படுத்தி சம்பளத்தை உயர்த்தி வழங்க வேண்டும், ஆட்டோ தொழிலாளர்களுக்கு எப் சி காலங்களில் ஆந்திரா மாநிலம் போல் ரூபாய் 10 ஆயிரம் நிதி வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சி மணிகண்டம் ஒன்றியம் சார்பில் சோமரசன்பட்டையில் கட்டட சங்க மாவட்ட தலைவர் எம் MR முருகன் தலைமையில் மறியல் போராட்டம் நடைபெற்றது. 

இப்போராட்டத்தில் ஒரு பகுதியாக சோமரசம்பேட்டை பஞ்சாயத்து அலுவலகத்தில் இருந்து அல்லித்துறை பஞ்சாயத்து அலுவலகத்தில் இருந்து தொழிலாளர்கள் ஊர்வலமாக சோமரசம்பேட்டை பெரியார் சிலை அருகில் சாலையில் அமர்ந்து மத்திய மாநில அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பி மறியலில் ஈடுபட்டனர். 

தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் தோழர் அயிலை சிவசூரியன் மறியலை துவக்கி வைத்து உரையாற்றினார். மறியல் போராட்டத்தில் கட்டட சங்க மாவட்ட செயலாளர் தோழர் C செல்வகுமார், அரசு போக்குவரத்து ஓய்வு பெற்ற சங்க தலைவர் தோழர் M மருதமுத்து சிறப்புரை ஆற்றினார்கள். சிபிஐ முன்னாள் மாவட்ட பொருளாளர் பேரூர் ப.நடராஜன், சிபிஐ அந்தநல்லூர் ஒன்றிய செயலாளர் தோழர் ராஜலிங்கம், சிபிஐ அந்தநல்லூர் ஒன்றிய முன்னாள் செயலாளர் தோழர் வீரமுத்து, மாதர் சங்க ஒன்றிய செயலாளர் தோழியர் முத்துலெட்சுமி, பெண்கள் சங்க மாநில துணை ஒருங்கிணைப்பாளர் தோழர் M மருதம்பாள்,

கட்டட சங்கம் மாவட்ட பொருளாளர் தோழர் பழனியப்பன், துணை தலைவர் தோழர் S முத்தழகு, தேசிய குழு உறுப்பினர் தோழியர் நிர்மலா, தரக்கட சங்க மாவட்ட துணை தலைவர் தோழர் மேகராஜ், உள்ளாட்சி சங்க மாவட்ட துணை தலைவர் தோழியர் நதியா உள்ளிட்ட 200க்கும் மேற்பட்டோர் மறியல் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/GgA8w690Wqd7IwIEsO6ZZ5

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn