மாநகராட்சி கவுன்சிலர் தர்ணா போராட்டம்

மாநகராட்சி கவுன்சிலர் தர்ணா போராட்டம்

திருச்சிராப்பள்ளி மாநகராட்சி 47வது வார்டுக்கு உட்பட்ட டிவிஎஸ் டோல்கேட் பகுதியில் திருச்சிராப்பள்ளி மாநகராட்சி மண்டலம் - 4 அலுவலக வளாகத்தில் திருச்சிராப்பள்ளி மாநகராட்சி மேயர், மாநகராட்சி கவுன்சிலர்கள் மற்றும் மாநகராட்சி உதவி ஆணையர் ஒப்புதல் மற்றும் அனுமதி இல்லாமல் மாணவர்கள் நூலகம் கட்டுவதற்காக அனுமதி கோரப்பட்டுள்ள இடத்தினை இடித்து இ-சேவை மையம் கட்டும் பணியை தொடங்கியுள்ளனர்.

மாநகராட்சி பொறியாளரின் தன்னிச்சையான இத்தகைய நடவடிக்கையினை கண்டித்தும், பணியினை உடனடியாக நிறுத்தி மாணவர்கள், மற்றும் அறிவு சார் மக்களின் நலனுக்காக ஏற்கனவே திட்டமிடப்பட்டுள்ள வகையில் நூலகம் அமைத்திட வலியுறுத்தி 47வது வார்டு மாநகராட்சி மாமன்ற உறுப்பினர் செந்தில்நாதன் தலைமையில் அப்பகுதி மக்கள் மாநகராட்சி மண்டல அலுவலகம் வாசலில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

தொடர்ந்து அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தையின் அடிப்படையில் பணிகள் தற்காலிகமாக கைவிடப்பட்டதுடன், தர்ணா போராட்டமும் கைவிடப்பட்டது.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/GgA8w690Wqd7IwIEsO6ZZ5
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn