திருச்சி மாநகராட்சி தொடக்கப்பள்ளியில் நூலகம் திறப்பு 

திருச்சி மாநகராட்சி தொடக்கப்பள்ளியில் நூலகம் திறப்பு 

திருச்சி புத்தூர் மாநகராட்சி தொடக்கப்பள்ளியில் நூலகம் திறப்பு விழா மாவட்ட நூலக அலுவலர் சிவகுமார் தலைமையில் நடைபெற்றது. அனைத்து தரப்பு மாணவர்கள் பயன்பாட்டிற்கான நூலகத்தை சிறப்பு விருந்தினரும், திருச்சி மாவட்டக் கல்வி அலுவலருமான கே.எஸ். ராஜேந்திரன் திறந்து வைத்து சிறப்புரை ஆற்றினார்.

அவர்தம் உரையில் தனியார் பள்ளிக்கு நிகராக அரசு பள்ளிகள் மாறி வருகின்றன. தனியார் பங்களிப்புடன் இந்த நூலகத்தை சிறப்பாக ஒரு அரசு தொடக்கப்பள்ளியில் அமைத்து இருப்பது சிறப்பான ஒன்று எனவும், இந்த நூலகம் இப்பள்ளி மாணவர்களுக்கு மட்டும் அல்லாமல் போட்டி தேர்வுகளுக்கு முன்னாள் மாணவர்கள் உட்பட பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளும் வகையில் அமைக்கப்பட்டு உள்ளது சிறப்புக்குரியது. இது இன்னும் பெரிய அளவிற்கு வளர்ச்சி பெற வேண்டும் எனவும் வாழ்த்தினார்.

விழாவில் வட்டாரக்கல்வி அலுவலர்கள் அருள்தாஸ் நேவீஸ், ஜெயலட்சுமி, ஜெகராபர்வீன், மாவட்ட மைய நூலகத்தின் வாசகர் வட்ட தலைவர் கோவிந்தசாமி, துணை தலைவர் கணேசன், மேனாள் கல்லூரி முதல்வர் அருணாச்சலம், பள்ளி தலைமையாசிரியர்கள் ஜாக்குலின், சரஸ்வதி, அமல்சேசுராஜ், வேதநாராயணன், ரெக்ஸ், ஜீவானந்தன், நீலகண்டன், பெர்ஜித்ராஜன் உட்பட பலர் பங்கேற்றனர். பள்ளி தலைமையாசிரியை அம்சவல்லி வரவேற்பு உரையாற்றினார்.  விழாவை குழந்தைசாமி, பட்டதாரி ஆசிரியர் தொகுத்து வழங்கினார். உதவி ஆசிரியை தஸ்லிம் பல்கிஸ் நன்றி கூறினார்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/C7dWGn2D61ELFrwqksYgdS

டெலிகிராம் மூலமும் அறிய...
https://t.me/trichyvisionn