திருச்சியில் நாளை (28.11.2021) மாற்றுத்திறனாளிகளுக்கான  தனியார் வேலைவாய்ப்பு முகாம்

திருச்சியில் நாளை (28.11.2021) மாற்றுத்திறனாளிகளுக்கான  தனியார் வேலைவாய்ப்பு முகாம்

திருச்சியில் புனித பிலோமினா நடுநிலைப்பள்ளி தஞ்சாவூர் மெயின் ரோடு, காட்டூரில் நவம்பர் 28ம் தேதி காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை மாற்றுத்திறனாளிகளுக்கான குறுகிய கால இலவச பயிற்சியுடன் கூடிய இலவச தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.

வேலை வாய்ப்பு முகாமில் எட்டாம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு படித்த 35 வயது உள்ள ஆண், பெண் இருபாலரும் கலந்து கொள்ளலாம். திமுக கழக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு அன்பில் அறக்கட்டளை சார்பில் வேலை வாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.

வேலைவாய்ப்பு முகாமை நிகழ்ச்சி ஏற்பாடு மற்றும் வாழ்த்துரையை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வழங்கவுள்ளார்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/C7dWGn2D61ELFrwqksYgdS

டெலிகிராம் மூலமும் அறிய...
https://t.me/trichyvisionn