குடியிருப்புகளுக்கு புதிதாக பாதாள சாக்கடை இணைப்பிற்கான விண்ணப்பம் வழங்கப்படுவதற்கான சிறப்பு முகாம் - மாநகராட்சி ஆணையர் தகவல்
திருச்சிராப்பள்ளி மாநகராட்சி, வார்டு குழு அலுவலகம் 3க்குட்பட்ட வார்டு எண்கள். 36, 37, 38, 39, 40, 42 மற்றும் 43 ஆகிய பகுதிகளில் குடியிருப்புகளுக்கு புதிதாக பாதாள சாக்கடை இணைப்பிற்கான விண்ணப்பம் வழங்கப்படுவதற்கான சிறப்பு முகாம் வருகின்ற (21.09.2024) சனிக்கிழமை அன்று காலை 10:00 மணியளவில் சிங்காரம் மஹால் (மான்ஃபோர்டு பள்ளி அருகில்) நடைபெறவுள்ளது.
திருச்சிராப்பள்ளி மாநகராட்சியில் அம்ரூத் திட்டத்தின் கீழ், புதிதாக சேர்க்கப்பட்ட பகுதிகள் மற்றும் விடுபட்ட பகுதிகளுக்கு பாதாள சாக்கடை வசதிகள் வழங்கும் பணிகள் Phase II ல் ரூ.377.29 கோடி மதிப்பீட்டில், பணிகள் துவங்கப்பட்டு, தற்போது அனைத்து பணிகளும் முடிவடைந்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வரும் நிலையில் உள்ளது.
திருச்சிராப்பள்ளி மாவட்ட அரசிதழ் சிறப்பு வெளியீடு எண்.7 நாள். (22.04.2021) புதிய பாதாள சாக்கடை கழிவுநீர் கட்டணங்களுக்கு ஒப்புதல் பெறப்பட்டு அன்று முதல் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் அடங்கும். தொகுப்பு எண்.1ல், SPS 3 கழிவுநீர் உந்து நிலையத்தில் அடங்கும் வார்டு எண். 36,37,38,394042(P), 43 மற்றும் SPS 4 கழிவுநீர் உந்து நிலையத்தில் அடங்கும் வார்டு எண். 42 (P), 43(P) மற்றும் 44 ஆகிய வார்டுகளில் பாதாள சாக்கடை திட்டப்பணிகள் முழுமையாக முடிக்கப்பட்டு.
மேற்கண்ட வார்டு குடியிருப்பு பகுதிகளில் புதிய பாதாள சாக்கடை இணைப்புக்கான விண்ணப்ப படிவம் (21.09.2024) தேதி அன்று சிங்காரம் மஹால் (மான்ஃபோர்டு பள்ளி அருகில்) நடைபெற உள்ள முகாமில் வழங்கப்பட உள்ளது. மேற்கண்ட முகாமில் பொதுமக்கள் அனைவரும் புதிய பாதாள சாக்கடை இணைப்பிற்கான விண்ணப்பம் சமர்ப்பிக்கும் போது நடப்பு ஆண்டு வரை செலுத்தப்பட்ட சொத்துவரி ரசீது நகல் மற்றும் பாதாள சாக்கடை இணைப்பிற்கான வைப்பு நிதி ஏற்கனவே செலுத்தப்பட்டிருப்பின் அதன் ரசீது நகல் இணைத்து விண்ணப்பத்தை பூர்த்தி செய்து விண்ணப்பிக்கும் படியும்,
புதிய பாதாள சாக்கடை இணைப்பு வேண்டுவோர் உரிய வைப்புத் தொகை செலுத்தி ஆவணங்களுடன் விண்ணப்பம் செய்யவும் கேட்டுக்கொள்ளப்படுகிறது.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/IpuTLRgmGqo0toZpY6O5jW
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision