வழக்குகளில் சிறப்பாக செயல்பட்ட போலீசாருக்கு டிஐஜி பாராட்டு

வழக்குகளில் சிறப்பாக செயல்பட்ட போலீசாருக்கு டிஐஜி பாராட்டு

திருச்சி மாவட்டம் முசிறி துளையாநத்தம் புதுக்காலனியைச் சேர்ந்த ரமேஷ் (39) என்பவர் அவரது மனைவி கோமதியை கடந்த (09.09.2022)-ம் தேதி கொலை செய்ததது சம்மந்தமாக ஜம்புநாதபுரம் காவல் நிலைய குற்ற எண். 132/2022, ச/பி 302 இ.த.ச-ன் படி 09.09.2022-ம் தேதி வழக்கு பதிவு செய்யப்பட்டது.

மேற்படி வழக்கை 136 நாட்களில் துரிதமாக நடத்தி குற்றவாளிக்கு தண்டனை பெற்று தந்த துறையூர் காவல் ஆய்வாளர் செந்தில்குமார், காவல் உதவி ஆய்வாளர் சுபாஷினி, சிறப்பு உதவி ஆய்வாளர் காமராஜ் மற்றும் ஜம்புநாதபுரம் காவல் நிலைய காவல் ஆளினர்கள் சிவராமன், கார்த்திகேயன், கலைவாணி, தீபிகா ஆகியோருக்கும்,

இலால்குடி அனைத்து மகளிர் காவல் நிலைய குற்ற எண். 40/22, ச/பி 294(b), 361,370,506(i) இ.த.ச r/w 81 ]] Act-ல் குழந்தையை கடத்தி சென்ற ஆறு நபர்களை கைது செய்தும், குழந்தையை கர்நாடகா மாநிலம், பெலகாவி என்ற இடத்தில் கைப்பற்றிய, இலால்குடி காவல் துணைக் கண்காணிப்பாளர் அஜய் தங்கம், சமயபுரம் காவல் ஆய்வாளர் கருணாகரன், காவல் உதவி ஆய்வாளர் இசைவாணி அனைத்து மகளிர் காவல் நிலையம், தலைமைக் காவலர் ப்ரெட்ரிக், கொள்ளிடம் காவல் நிலையம், முதல் நிலைக் காவலர்கள்பாண்டியராஜன், செயலரசு

காவலர்கள் அபுதாளி, மாரீஸ்வரன், சமயபுரம் காவல் நிலையம் ஆகியோர்களுக்கு இன்று (24.01.2023)-ம் தேதி காலை திருச்சி சரக காவல்துறை துணைத் தலைவர் A.சரவண சுந்தர், காவல் அதிகாரிகள் மற்றும் ஆளினர்களை வரவழைத்து மேற்படி வழக்குகளில் சிறப்பாக பணிபுரிந்தமைக்காக பாராட்டு சான்றிதழ் மற்றும் வெகுமதியும் அளித்து வெகுவாக பாராட்டினார்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/GgA8w690Wqd7IwIEsO6ZZ5

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn