அதிமுக பேனரில் இபிஎஸ் படத்திற்கு கருப்பு மை - திருச்சியில் பரபரப்பு

அதிமுக பேனரில் இபிஎஸ் படத்திற்கு கருப்பு மை - திருச்சியில் பரபரப்பு

அதிமுக 53வது ஆண்டு தொடக்க விழாவினை அதிமுகவினர் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். மாவட்டம் முழுவதும் அதிமுக 53 வது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டும், தீபாவளிக்கு வாழ்த்து தெரிவித்தும் பிளக்ஸ் பேனர்கள் வைக்கப்பட்டுள்ளது.

அதன் ஒரு பகுதியாக திருச்சி மாநகரம் தில்லை நகர் 7வது கிராஸ் பகுதியில் அதிமுக மாநகர் மாவட்ட செயலாளர் சீனிவாசனன் அலுவலகத்திற்கு செல்லும் பகுதியில் தீபாவளி வாழ்த்துகள் தெரிவித்து பிளக்ஸ் பேனர் ஒட்டப்பட்டிருந்தது. அதில் முன்னாள் முதலமைச்சர்கள் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, முன்னாள் அமைச்சர் தங்கமணி, திருச்சி மாநகர் மாவட்ட செயலாளர் சீனிவாசன் ஆகியோரது புகைப்படம் அச்சிடப்பட்டிருந்தது.

அது எடப்பாடி பழனிச்சாமி படத்தின் மீது மர்ம நபர்கள் கருப்பு மை பூசியுள்ளனர். அதே போல அதிமுக அலுவலகத்திற்கும் செல்லும் வழி என வைக்கப்பட்டிருந்த சிறிய அளவிலான வழிக்காட்டும் பேனரிலும் எடப்பாடி பழனிச்சாமி படத்தின் மீது கருப்பு மை பூசப்பட்டிருந்தது. இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்தில் அதிமுகவினர் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

உடனடியாக அதிமுக வினர் சிறிய பேனரை அங்கிருந்து அகற்றினர். தீபாவளி வாழ்த்துக்களுடன் ஒட்டப்பட்டிருந்த பெரிய அளவிலான பேனரில் எடப்பாடி பழனிச்சாமி படத்தின் மீது பூசப்பட்டிருந்த கருப்பு மையை மறைக்கும் வகையில் அதன் மீது புது படத்தை ஒட்டினர். எடப்பாடி பழனிச்சாமி படம் மீது கருப்பு மை பூசிய நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவல் நிலையத்தில் புகார் அளிக்க உள்ளதாக மாநகர் மாவட்ட செயலாளர் சீனிவாசன் தெரிவித்தார்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/LYWjbKaEy206I5aquHTp81

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision