ராணி மங்கம்மாள் காலத்தில் கட்டப்பட்ட மண்டபம் - கருமண்டபத்தின் பெயர் காரணம்!!

ராணி மங்கம்மாள் காலத்தில் கட்டப்பட்ட மண்டபம் - கருமண்டபத்தின் பெயர் காரணம்!!

திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து திண்டுக்கல் செல்லும் சாலையில் முக்கியமான பகுதியான கருமண்டபத்தை கடந்து தான் நாம் செல்லவேண்டும். முக்கியமான பள்ளி, கல்லூரிகள், ஷோரூம், கடைகள் என இருக்கும் இந்த பகுதி மக்கள் கூட்டத்திலேயே இருக்கும். 

திருச்சி மாநகரின் முக்கிய பகுதியான இந்த கருமண்டபத்திற்கு ஏன் கருமண்டபம் என பெயர் வந்தது?? கேள்வியுடன் அப்பகுதியின் மாரியம்மன் கோவில் பூசாரி சண்முகம் அணுகினோம். திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து கருமண்டபம் பகுதியில் உள்ளே வரும்போது இடதுபுறத்தில் ஒரு முருகன் கோவில் இருப்பதை கவனித்திருப்பீர்கள். 

அது திருச்சியை ஆண்டு கொண்டிருந்த ராணி மங்கம்மாள் காலத்தில் பல நூறு வருடங்களுக்கு முன்பு கட்டப்பட்ட மண்டபம் ஆகும். கருங்கல், செங்கல் கொண்டு கட்டப்பட்ட இந்த மண்டபம் தற்போது இடிந்த நிலையில் இருந்தாலும் கட்டப்பட்ட காலத்தில் இந்த சாலையின் வழியே செல்லும் பயணிகள் மற்றும் பக்தர்களுக்கு தங்கி செல்லும் மண்டபமாக இருந்துள்ளது. அதனாலயே இந்த பகுதி கருமண்டபம் என பெயர் கொண்டு அழைக்கப்பட்டது. 

அதன்பின் வேல் வைத்து வழிபாடு நடத்தி வந்தனர் தற்போது மூன்று தலைக்கட்டுகளுக்கு முன்பிருந்தே எங்களின் குடும்பத்தினர் அங்கு பூஜை செய்து வருகிறோம் என்றார். அரசின் கீழ் இருக்கும் இந்த மண்டபம் தற்போது இடிந்த நிலையில் இருக்கிறது, இதனை சரி செய்தால் வரலாற்று சின்னமாக இங்கு இருக்கும் என கோரிக்கையும் வைக்கிறார்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/LYWjbKaEy206I5aquHTp81

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision