வளர்ப்பு நாய்கள் கடிப்பதற்கான காரணம் என்ன? - பிரபல கால்நடை மருத்துவமனை மருத்துவர் விளக்கம்.

வளர்ப்பு நாய்கள் கடிப்பதற்கான காரணம் என்ன? - பிரபல கால்நடை மருத்துவமனை மருத்துவர் விளக்கம்.

செல்லப் பிராணிகளுக்கான அதிநவீன சிகிச்சை மற்றும் பராமரிப்பு கால்நடை மருத்துவமனை திருச்சி சாஸ்திரி ரோடு பகுதியில் புதிதாக FURRY GENIUS என்ற பெயரில் செல்ல வளர்ப்பு பிராணிகளுக்கான பிரம்மாண்டமான அதிநவீன மருத்துவமனை இயங்கி வருகிறது. இம்மருத்துவமனையில் செல்லப் பிராணிகளின் முழு உடல் பரிசோதனை, உடல் உறுப்புகள் பரிசோதனை, டிஜிட்டல் எக்ஸ்ரே, அறுவை சிகிச்சை அரங்கம், பல் ,கண் பரிசோதனை பிரிவு மற்றும் முடி பராமரிப்புக்கான ஸ்பா ஆகியவை மட்டுமல்லாமல் இரத்த பரிசோதனை, தடுப்பூசி ஆகிய வசதிகளும் உள்ளது.

மேலும் இந்த கால்நடை மருத்துவமனையில் செல்ல பிராணிகளுக்காக சிறப்பு பயிற்சிகள் வழங்கப்படுகிறது. மேலும் வெளியூர் செல்பவர்கள் தங்களது செல்லப் பிராணிகளை இங்கு ஒப்படைத்துச் செல்கின்றனர். மேலும் மருத்துவமனையில் அனைத்து விதமான உணவுகள், மருந்துகள் மற்றும் பாதுகாப்பு உபகரணங்களும் விற்பனை செய்யப்படுகிறது. இந்நிலையில் தமிழகத்தில் தற்போது நாய்கள் பற்றிய அச்சம் மக்கள் மத்தியில் பேசும் பொருளாகியுள்ளது.

நாய்கள் எதற்காக கடிக்கிறது? அவற்றை எவ்வாறு தடுக்கலாம்? என்கிற வழிமுறைகள் குறித்து பிரபல (FURRY GENIUS) கால்நடை மருத்துவமனையின் நிறுவனரும், கால்நடை மருத்துவருமான சிரஞ்சீவிகுமார் கூறுகையில்... நாய் என்பது கடிக்கும் என்பது உண்மை எதனால் கடிக்கும் என்றால் ஒவ்வொரு விலங்குகளுக்கும் ஒவ்வொரு குணாதிசயம் உள்ளது மாடு என்றால் முட்டும், குதிரை என்றால் உதைக்கும், நாய் என்றால் கடிக்கும் இதுபோல் ஒவ்வொரு விலங்குகளுக்கும் ஒவ்வொரு குணாதிசயங்கள் உள்ளது.

நாய் என்றால் கடிக்கும் எதனால் கடிக்கிறது எந்த நேரத்தில் கடிக்கும் என பார்த்தால் ஒரு நாய் தன்னுடைய பாதுகாப்பிற்காக கடிக்கும். தேவையில்லாமல் ஒரு வீட்டிற்குள் நுழையும் என்றால் கடிக்கும் அல்லது மற்ற விலங்குகள் நுழையும் போது அதனுடைய குணாதிசயம் மாறும் அதேபோல் வெடி வெடிக்கும் போது அல்லது அந்த நாயை தாக்க முற்படும்பொழுது கடிப்பதற்கான ஒரு காரணம். ஒரு பெண் நாய் குட்டி போட்டது தன் குட்டிகளை பாதுகாத்துக் கொண்டிருக்கும் பொழுது அந்த குட்டிகளை தாயிடம் இருந்து பிரிக்கிறோம் என்றால் கண்டிப்பாக கடிக்கும். நாய் கடிப்பதை நிறுத்துவது கடினம் மற்றவர்களை எப்படி கடிக்காமல் பார்த்துக் கொள்வது என்பது முக்கியம்.

இது பற்றி நாம் தெரிந்து கொள்வது மிக முக்கியம். முதலில் ஒரு நாய் மற்ற நாய்களுடன் பழகுவது மற்றும் ஒரு வீட்டில் வளர்க்கப்படும் நாய்க்கு உணவு மட்டும் அளிப்பது அல்லாமல் அதன் மீது பாசம் கொண்டு வளர்க்க வேண்டும். கடிக்கக்கூடிய அனைத்து நாய்களும் வெறிநாய்கள் அல்ல. வீட்டில் வளர்க்கப்படும் நாய்கள் அல்லது தெரு நாய்கள் அனைத்தும் கடிப்பதற்கு சாத்தியக்கூறுகள் உள்ளது. அது மற்றவர்களை கடிக்காமல் பார்த்துக் கொள்ள அதனுடைய குணாதிசயங்கள் மாறாமல் பார்த்துக் கொள்ளவும். ஒரு நாய் கடிப்பதற்கு வெயில் அதிகமாகவோ, குளிர் அதிகமாகவோ அல்லது மழை காரணமாகவோ இருக்க முடியாது என்பதை முதலில் நாம் புரிந்து கொள்ள வேண்டும் .

அது எப்பொழுது கடிக்கும் என்றால் உணவு மற்றும் வெயில் காலங்களில் தண்ணீர் கிடைக்காமல் இருப்பதே காரணம். எதனால் குழந்தைகளை அதிகமாக கடிக்கிறது என்றால், நாய்களின் சமூக பழக்க வழக்கங்களை குழந்தைகளுக்கு கற்றுக் கொடுக்க வேண்டும். அனைத்து பள்ளிகளிலும் குழந்தைகளுக்கு கற்றுக் கொடுக்க வேண்டும். ஒரு வீட்டில் உள்ள நாய் அந்த குழந்தையை தாக்குவதற்கான காரணம் நாயை விளையாட்டுப் பொருளாக கருதி அந்த நாயை தாக்குவது, அந்த நாய் அந்த குழந்தையை கவனித்து தாக்குவதற்கு முற்படும்.

நமது நாட்டில் விலங்குகளுடன் பழகுவதற்கு ஒரு சமத்துவம் இல்லை. வெளிநாடுகளில் வளர்ப்பு பிராணிகள் போக்குவரத்துகளில் பயணம் செய்வது என்பது சர்வ சாதாரணம். ஏனென்றால் இங்கு வளர்க்கப்படும் விலங்குகளுக்கு கவனம் செலுத்துவது குறைவே. அதற்கான தனி கவனம் செலுத்த வேண்டும். உணவு மற்றும் அதற்கான உறைவிடம் கொடுத்து இருக்க வேண்டும். நாய் வளர்ப்பவர்கள் அதற்கான உணவு மற்றும் தடுப்பூசிகள் முறையாக வழங்கி இருக்க வேண்டும். தெரு நாய்கள் என்று பார்க்கும் பொழுது அனைத்து மாநகராட்சியும் கருத்தடை என்பதை முறையாக செயல்படுத்தி வருகின்றனர். இதனால் தெருநாய்கள் விகிதம் குறைந்து வருகிறது. இருந்த போதிலும் இருக்கின்ற தெரு நாய்களை துன்புறுத்துதல் என்பது இருக்கக்கூடாது.

தெரு நாய்கள் தெருவில் செல்லும் பொழுது கல்லை வைத்து அடிப்பது, பைக்கை வேகமாக ஓட்டுவது, ஹாரன் அடிப்பது, காரில் செல்லும் போது வேகமாக செல்லுவது இது போன்ற செல்களில் ஈடுபடுவது அதன் சிறுவயதில் இருந்து அதன் மனதில் வேறுபட்ட சூழலை உருவாக்கும். குறிப்பாக சில தெருநாய்கள் கார்களை மட்டும் துரத்தும் அல்லது இருசக்கர வாகனங்களை மட்டும் துரத்துவதற்கான காரணமாகவும். ஒரு நாய் உங்களை தாக்க வருகிறது என்றால் அதன் கண்ணை பார்த்து செய்வது தவறான ஒன்றாகவும் ஏனென்றால் அந்த நாய்க்கு நீங்கள் சவால் விடுவதாக கருதப்படும்.

தற்போது பல்வேறு விதிகளை அரசு விதித்திருந்தாலும் அந்த நாய்களுக்கான குணாதிசயங்கள் படி நாம் நடந்து கொள்ள வேண்டும். ஒரு நாய் ஒருவரை கடிக்கும் பொழுது நாம் அதனை தடுப்பது என்பது மிக கடினம். ஏனென்றால் ஒருவரை தாக்கும் போது அதன் வலிமை மூன்று மடங்காக உயரும். நாய்கள் வளர்க்க விரும்புவார்கள் அந்தந்த சூழ்நிலையில் வளர்க்கப்படும் நாய்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் .

நாய்களின் வாயை கட்டி நடை பயிற்சி மேற்கொள்ளும் பொழுது கிட்ஸ் ஸ்ட்ரோக் ஏற்பட வாய்ப்புள்ளது. பெரிய நாய்களின் குணாதிசயங்கள் புரிந்து கொள்வது நிரந்தர தீர்வாக இருக்கும். அதேபோல் வளர்க்கப்படும் நாய்கள் நீங்கள் வளர்க்கும் சூழ்நிலையில் இந்த நாய்கள் வளருமா என்பதை அறிந்து கொண்டே அந்த நாய்களை வளர்க்க வேண்டும். ஒரு சிறிய இடத்தில் பெரிய நாய்களை வளர்ப்பது என்பது இயலாத காரியம். இதனால் அந்த நாய்களின் உனா அதிசயங்கள் மாறும்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/EOjjjDwQWZa8HOTrrk6ttd

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision