குடியரசு தினத்தன்று காமராஜர் சிலை முன்பு தியாகி அமர்ந்து போராட்டம்.

குடியரசு தினத்தன்று காமராஜர் சிலை முன்பு தியாகி அமர்ந்து போராட்டம்.

திருச்சி மாவட்டம், மணப்பாறை சேதுரத்தினபுரத்தை சேர்ந்தவர் சுதந்திர போராட்ட தியாகி சுந்தரம் (97) இவர் சுதந்திர போராட்டங்களில் கலந்து கொண்டததிற்காக தியாகி பென்சன் உள்பட அரசு சலுகைகள் கிடைத்துக் கொண்டு உள்ளது.

இந்நிலையில் இன்று காலை கோவில்பட்டி சாலையில் உள்ள காமராஜர் சிலை முன்பு அமர்ந்து தியாகி சுந்தரம் போராட்டத்தில் ஈடுபட்டார். போராட்டத்தில் தனது மகனுக்கு வேலை வழங்க வேண்டும், வீடு கட்டுவதற்கு நிதி உதவி அரசாங்கம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.

போராட்டம் நடத்திய இடத்திற்கு வந்த காவல்துறையினர், தனி வட்டாட்சியர் சுந்தர பாண்டியன், கிராம நிர்வாக அலுவலர் ரஞ்சிக்குமார ஆகியோர் தியாகி சுந்தரத்திடம் பேச்சுவார்த்தை நடத்தி இன்று குடியரசு தினம் ஆகையால் நாங்கள் உங்களுக்கு மரியாதை செலுத்த வேண்டும்.

அதனால் போராட்டத்தை விட்டு வீட்டிற்கு செல்லுங்கள் அதிகாரிகள் நாங்கள் வந்து வீட்டிற்கு உங்களை பார்க்கிறோம் என கூறியதையடுத்து தியாகி சுந்தரம் போராட்டத்தை கைவிட்டு வட்டாட்சியர் அலுவலகத்திற்கு சென்று கோரிக்கை மனு கொடுத்து சென்றார். குடியரசு தினத்தன்று தியாகி போராட்டத்தில் ஈடுபட்டது அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... 

https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO

#டெலிகிராம் மூலமும் அறிய....

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision