இந்தியாவை கூட்டாட்சி நாடாக மாற்ற வேண்டிய கடமையும், பொறுப்பும் நமக்கு இருக்கிறது - முதல்வர் ஸ்டாலின் பேச்சு

இந்தியாவை கூட்டாட்சி நாடாக மாற்ற வேண்டிய கடமையும், பொறுப்பும் நமக்கு இருக்கிறது - முதல்வர் ஸ்டாலின் பேச்சு

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வெல்லும் சனநாயகம் மாநாடு திருச்சியில் நேற்று நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றுகையில்...... இந்தியாவை கூட்டாட்சி நாடாக மாற்ற வேண்டிய கடமையும் பொறுப்பும் நமக்கு இருக்கிறது. தமிழ்நாட்டில் பா.ஜ.க என்பது பூஜ்யம் தான் அதனால் தமிழ்நாட்டில் நாம் அவர்களை குறித்து கவலைப்பட தேவையில்லை.

ஆனால் மற்ற பகுதிகளில் அவர்களை வீழ்த்த வேண்டும் அதற்காக தான் இந்தியா கூட்டணி. இந்தியா கூட்டணியை தனிப்பட்ட ஒரு கட்சிக்கு எதிரான கூட்டணி என சுருக்கி விட முடியாது. இந்தியாவின் பன்முக தன்மை, மதச்சார்பின்மை ஆகியவற்றை காக்க தான் இந்தியா கூட்டணி. பா.ஜ.க மீண்டும் ஆட்சிக்கு வந்தால் கூட்டாட்சி இருக்காது, நாடாளுமன்ற ஜனநாயகம் இருக்காதுமாநிலங்களை கார்ப்பரேஷன்களாக ஆக்கிவிடுவார்கள்.

ஜம்மு காஷ்மீர் போல் மற்ற எல்லா மாநிலங்களும் ஆகி விடும். உலக நாடுகள் மத்தியில் இந்தியாவிற்கு தலைகுணிவை ஏற்படுத்தும் ஆட்சியாக பா.ஜ.க ஆட்சி இருக்கிறது. இந்தியாவை சர்வாதிகார நாடா மாற்றி விட்டாலும் விடுவார்கள். மாநிலத்திற்கு மாநிலம் அரசியல் நிலை மாறுபடும் ஆனால் நடக்க உள்ளது நாடாளுமன்ற தேர்தல் அதில் பா.ஜ.க வை வீழ்த்த வேண்டும் என்கிற எண்ணத்தில் கூட்டணி கட்சிகள் செயல்பட வேண்டும். பகைவர்களையும் சேர்த்து துரோகிகளையும் நாம் அடையாளம் காட்ட வேண்டும்.

பா.ஜ.க விற்கு ஏற்பட்டுள்ள பயத்தை இந்தியா கூட்டணி உணர்ந்தாக வேண்டும். நாம் ஒற்றுமையாக இருந்தால் ஜனநாயகம் வெல்லும் அதை  வரும் காலம் சொல்லும்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...

https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO

#டெலிகிராம் மூலமும் அறிய....

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision