நாம் மக்களுக்கு எதிரான கொள்கைக்கு எதிரானவர்கள் - காங்கிரஸ் கட்சி தலைவர் அழகிரி பேச்சு

நாம் மக்களுக்கு எதிரான கொள்கைக்கு எதிரானவர்கள் - காங்கிரஸ் கட்சி தலைவர் அழகிரி பேச்சு

திருச்சியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வெல்லும் ஜனநாயகம் மாநாடு நேற்று நடைபெற்றது இதில் கலந்துகொண்ட தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மாநில தலைவர் அழகிரி பேசுகையில்..... மன்னர்கள் ஆட்சி காலத்தில் சர்வாதிகாரம் தான் இருந்தது. இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு தான் அரசியலில் சமத்துவம் வந்தது.

ஆனால் சமூக வாழ்க்கையில் சமத்துவம் வரவில்லை. கடந்த 70 ஆண்டுகளாக அதுக்காகத்தான் போராடி வருகிறோம். 5000 ஆண்டுகள் ஏற்பட முடியாத சமத்துவத்தை கடந்த 70 ஆண்டுகளில் கொஞ்சம் சாதித்துள்ளோம். ஜனநாயகத்தின் மூலம் தான் அனைவருக்கும் சமூகநீதியை ஏற்படுத்த முடியும், அனைவருக்கும் சமமான வாய்ப்புகளை ஜனநாயகத்தால் தான் ஏற்படுத்த முடியும். எல்லா காலங்களிலும் அநீதியை எதிர்த்து சமத்துவத்திற்காக போராடி இருக்கிறோம்.

எந்த ஒன்றையும் நாம் எளிதாக பெற்று விட முடியாது எதுவும் எளிதாக நமக்கு கிடைத்துவிடவில்லை. தனி மனிதனுக்கு எதிரானவர்கள் இல்லை நாம் மக்களுக்கு எதிரான கொள்கைகளுக்கு தான் எதிரானவர்கள். பலரின் தியாகத்தால் நாம் சுதந்திரத்தையும் ஜனநாயகத்தையும் பெற்றுள்ளோம். ஆனால் இன்று மதத்தின் பெயரால் ஜாதியின் பெயரால் கடவுளின் பெயரால் இந்த நாட்டிலே ஒரு புரட்டை ஏற்படுத்த முடியும் என சிலர் கருதுகிறார்கள்.

அதற்காக அவர்கள் எல்லா விதமான தகிடுதட்டங்களையும் பயன்படுத்துகிறார்கள். அவர்கள் வெற்றி பெறக் கூடாது என்பதற்காகத்தான் இந்த மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாடு வெற்றி பெற்றுள்ளது இந்தியா கூட்டணியும் வெற்றி பெறும்  என்றார்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...

https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO

#டெலிகிராம் மூலமும் அறிய....

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision