திருச்சி விசிக மாநாட்டில் வைகோ பேச்சு

திருச்சி விசிக மாநாட்டில் வைகோ பேச்சு

திருச்சியில் நேற்று நடைபெற்ற விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வெல்லும் சனநாயகம் மாநாட்டில் கலந்து கொண்ட மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறுகையில்..... வெல்லும் சனநாயகம் என்ற வார்த்தையில் இது வரை இந்தியா முழுவதும் கூட்டம் நடந்ததில்லை, தற்போது திருமா நடத்தியுள்ளார்.

எதிர்காலத்தில் இந்த மாநாட்டால் பாஜகவும் ஆர்எஸ்எஸ் கூட்டமும் வீழ்த்தப்பட்டது என்று பேசுப்படும். இந்துராஸ்டிரம் அமைந்து விட்டால் அதைவிட பேராபத்து வேறு எதுவும் கிடையாது அதனால் போரிட்டாவது அதை நிறுத்த வேண்டும் என்று அம்பேத்கர் கூறினார். அவர் கூறியதை போல் திருமாவளவன் செயல்படுகிறார்.

வரக்கூடிய நாடாளுமன்ற தேர்தலில் பாஜக இந்தியா கூட்டணியால் துடைத்தெறியப்படும். பாஜக இங்கு வந்து வாலாட்ட முயல்கிளார்கள். எத்தனை அண்ணாமலை வந்தாலும் இங்கு எதுவும் செய்ய முடியாது. தமிழ்நாடு புதுச்சேரி சேர்த்து 40 தொகுதிகளிலும் இந்தியா கூட்டணி வெல்லும். இந்தியா முழுவதும் பாஜக வீழ்த்தபட வேண்டும்  என்றார்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...

https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO

#டெலிகிராம் மூலமும் அறிய....

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision