புதிய சாலைகளுக்கு நிதி எங்கு இருந்து வந்தது - சாலை பயனீட்டாளர் நல அமைப்பு கேள்வி?
திருச்சி மாவட்ட சாலை பயனீட்டாளர் நல அமைப்பு சார்பில் நகர்புற மற்றும் ஊரக வளர்ச்சி துறைக்கு இணையதளம் மூலம் புகார் மனு அளிக்கப்பட்டு உள்ளது. இதில் திருச்சி மாநகராட்சியில் பொது நிதியின் மூலமாக சாலை பராமரிப்பு பணிகளை மேற்கொண்டுள்ளனர்.
சாஸ்திரி ரோடு, தில்லை நகர், மெயின் ரோடு, அண்ணா நகர் மெயின் ரோடு, சிவப்பிரகாசம் ரோடு ஆகிய பகுதிகளில் புதிய சாலை அமைக்கும் பணியை மேற்கொண்டனர். தார் சாலைகள் போடும் போது அரசு கூறிய விதிமுறைகனான பழைய சாலைகளை சுரண்டி விட்டு புதிய சாலைகள் அமைக்க வேண்டும் என்கிற விதிகளை பின்பற்றாமல் மாநகராட்சி சாலை அமைப்பதாக தெரிய வருகிறது.
மேற்கண்ட சாலை பணிகளில் சாலைகள் அமைப்பது தொடர்பான மாண்புமிகு தலைமை செயலாளர் அவர்களின் உத்தரவு மீறப்பட்டுள்ளதா என்பதை மாவட்ட சாலை பாதுகாப்பு ஆலோசனை குழு தலைவரான மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு செய்து மேற்கண்ட சாலை பணிகளில் அரசு விதிகளை மீறி பணிகள் நடந்து இருந்தால் சம்பந்தபட்ட துறை அலுவலர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டுகிறோம் என குறிப்பிட்டுள்ளது.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய:
https://chat.whatsapp.com/KXPqSPrc2vf6QE7SbvFzFC