திருச்சி பொன்மலை யானை பூங்காவில் மரம் வளர்ப்பு

திருச்சி பொன்மலை யானை பூங்காவில் மரம் வளர்ப்பு

தென்னக ரயில்வே பொன்மலை  மத்திய பணிமனையானது, கடந்த இரண்டு ஆண்டுகளில் சுற்றுச்சூழலின் பல்வேறு காரணிகளை மேம்படுத்த பெரும் முயற்சிகளை எடுத்துள்ளது. பணிமனையின் உள்ளேயும் வெளியேயும் பல்வேறு வகையான மரங்கள்/தாவரங்கள் வளர்ப்பது அந்த நடவடிக்கைகளில் ஒன்றாகும்.

 கடந்த இரண்டு ஆண்டுகளாக, திசு வளர்ப்பு மூங்கில் வகையான பீமா மூங்கில் என்ற சிறப்பு வகை மூங்கில்களை பொன்மலை மத்திய பணிமனையானது நட்டு வருகிறது. இந்த வகை மூங்கில் பல்வேறு சிறப்பு பண்புகளை கொண்டது.   இது அதிக கார்பன்-டை-ஆக்சைடை உறிஞ்சி மற்ற தாவரங்களை விட அதிக ஆக்ஸிஜனை உற்பத்தி செய்கிறது. 

இது மிக வேகமாக வளரும், அதாவது 30 மாதங்களில் 35 அடி உயரம்  வரை வளரும்.   முழுமையாக வளர்ந்த ஒரு செடி 320 கிலோ ஆக்ஸிஜனை வளிமண்டலத்திற்கு ஆண்டுதோறும் வெளியிடுகிறது.    இது ஒரு வருடத்திற்கு ஒரு நபரின் தேவையை விட அதிகமாகும்.

நான்கு ஆண்டுகள் முழு வளர்ச்சிக்குப் பிறகு, முழு ஆக்ஸிஜன் பூங்காவும் 100 டன் கார்பன்-டை-ஆக்சைடை உறிஞ்சிவிடும்.  மற்ற மூங்கில் வகைகளின் வெற்று குறுக்குவெட்டுடன் ஒப்பிடும்போது பீமா மூங்கிலின் திடமான குறுக்குவெட்டில் இருந்து இதைக் காணலாம்.     இது 4500 kcal/kg (நிலக்கரிக்கு சமமான)  மிக அதிக எரிதிறன் மதிப்பைக் கொண்டுள்ளது.

இதன் காரணமாக, இதனை ஒரு மாற்று உயிரி எரிபொருளாகப் பயன்படுத்தலாம், கைவினை பொருட்கள் மற்றும் பல சூழலுக்கு உகந்த பொருட்களைத் தயாரிக்கவும் பயன்படுத்தலாம். 

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/JGMr6bBQJfFC6SA9x0ZYzj

#டெலிகிராம் மூலமும் அறிய...
https://t.co/nepIqeLanO


.