ஸ்ரீரங்கம் நம்பெருமாள் காவிரித்தாய்க்கு ஆடிச்சீர் வழங்கும் வைபவம்
ஸ்ரீரங்கம் நம்பெருமாள் காவிரித்தாய்க்கு ஆடிச்சீர் வழங்கும் வைபவம்.ஆண்டுதோறும் ஆடிமாதம் 28-ம் தேதி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் ஆலயத்தில் நம்பெருமாள் தனது தங்கையான காவிரி தாய்க்கு சீர்கொடுப்பது வழக்கம். ரங்கநாதரின் தங்கையாக காவிரி அன்னை கருதப்படுகிறாள். அதன்படி ஆடி 28ம் தேதியான இன்று ரங்கநாதர் ஸ்ரீரங்கம் அம்மா மண்டபத்திலுள்ள படித்துறைக்கு காலையில் எழுந்தருள்வார்.
அங்கு சுவாமிக்கு திருமஞ்சனம் (அபிஷேகம்) நடக்கும். மாலையில் புடவை, திருமாங்கல்யம், வெற்றிலை பாக்கு, பழங்கள் முதலிய சீர்வரிசைகளை யானையின் மேல் ஏற்றி ஸ்ரீரங்கம் கோயிலிலிருந்து அம்மா மண்டபம் படித்துறைக்குக்கு வருவர் பெருமாள் முன்னிலையில் வைத்து தீபாராதனை செய்து பின்பு அவற்றை காவிரியில் மிதக்கவிடுவர்.இந்தக் காட்சியை தரிசித்தால் உணவும், உடையும் செழிப்பாக கிடைக்கும் என்பது ஐதீகம்.
அதனால் மூலஸ்தானத்திலிருந்து நம்பெருமாள் புறப்பாடாகி மாலை ரெங்கவிலாச மண்டபத்தில் எழுந்தருளினார். அங்கு அலங்கார அமுது செய்து பின்னர் காவிரித்தாய்க்கு பட்டுவஸ்திரம், மாங்கல்யம், மஞ்சள், பூ உள்ளிட்ட மங்கலப் பொருட்கள் உள்ளடக்கிய ஆடிச்சீர் அளிக்கும் வைபவம் நடைபெற்றது.மங்கலப்பொருட்கள் யாவும் ஸ்ரீரங்கம் கோவில் பட்டாச்சார்யார்களால் சாமரங்கள் வீசியபடி தலையில் சுமந்து ஊர்வலமாக எடுத்துவரப்பட்டு பின்னர் அம்மாமண்டபத்தில் கரை புரண்டு ஓடும் காவிரித்தாய்க்கு சீராக அளிக்கப்பட்டது. காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் இந்நிகழ்வை காண பொதுமக்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை.
திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய...
https://chat.whatsapp.com/DOwpV9QCMLgL8UqkbAZAxm
#டெலிகிராம் மூலமும் அறிய.. https://t.co/nepIqeLanO