சிலம்பம் சுற்றுதலில் புதிய உலக சாதனை முயற்சி!
இன்றைய தினம் மே 1ம் தேதி சர்வதேச உழைப்பாளர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது, உழைப்பை மூலதனமாக கொண்டு நாட்டின் வளர்ச்சிக்கும், தங்களை சார்ந்துள்ள குடும்பத்தினர் நலத்திற்காகவும் அரும்பாடு பட்டு உழைக்கும் தொழிலாளர்களை கௌரவிக்கும் விதமாகவும் நாட்டில் அதிகரித்து வரும் பெண் குழந்தைகள் மீதான வன்கொடுமைகளை தடுக்கவும் பெண் குழந்தைகள் மட்டுமின்றி குழந்தைகள் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். மேலும் அன்பு கொண்டு அரவணைத்து பாதுகாக்கும் பெற்றோர்களை போற்ற வேண்டும்.
பெற்றோர்களிடம் அன்பு செலுத்த வேண்டும் என்பதனை வலியுறுத்தும் விதமாக இன்றைய தினம் சிலம்ப வீரர், வீராங்கனைகள் 600க்கும் மேற்பட்டோர் உரையிடத்தில் பங்கேற்று சிலம்பம் சுற்றி உலக சாதனை நிகழ்த்தினர். உலக சிலம்ப இளையோர் சம்மேளனத்தின் சார்பில் திருச்சி கல்லுக்குழி ரயில்வே மைதானத்தில் காலை 6:00 மணி முதல் தொடங்கி 9:30 மணி வரையிலும் 3:00 மணி நேரம் 30 நிமிடம் இடைவிடாது, பல்வேறு சிலம்பக் கூடத்தில் சிலம்பம் பயிற்சி பெற்று வரும் 620 சிலம்ப மாணவ, மாணவிகள் ஒன்றிணைந்து சிலம்பம் சுற்றி புதிய உலக சாதனையினை நிகழ்த்தினர்.
சாதனை புத்தக பார்வையாளர்கள் மற்றும் பொதுமக்கள் முக்கிய பிரமுகர்கள் முன்னிலையில் நிகழ்த்தப்பட்ட இந்த சாதனை நிகழ்வானது கிட்ஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம் பெறுகிறது.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய.... https://chat.whatsapp.com/I1qYhcBomJGKR4Fi6km3h0
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision