தயாராக இருக்கிறோம் - உதயநிதியிடம் கோரிக்கை வைத்த அமைச்சர்

தயாராக இருக்கிறோம் - உதயநிதியிடம் கோரிக்கை வைத்த அமைச்சர்

விளையாட்டுத்துறை மறுமலர்ச்சிக்கான உத்திகள் சவால்கள் தேர்வுகள் (ICRS 2024) என்ற பொருண்மையின் கீழ், திருச்சிராப்பள்ளி தேசியக் கல்லூரியில் இன்று பன்னாட்டு கருத்தரங்கம் தொடக்கியது. இவ்விழாவில் தமிழக இளைஞர் நலன், விளையாட்டு, வறுமை ஒழிப்பு மற்றும் சிறப்பு திட்ட அமலாக்கத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். அவர் ICRS2024 விழாவின் கொடியினை ஏற்றிச் சிறப்பித்தார். நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு முன்னிலையில், பள்ளிக்கல்விததுறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி விழா நினைவு பரிசினை வழங்கினார்.

முன்னதாக அமைச்சர்கள் மாணவர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டனர். ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வென்ற விளையாட்டு வீரர் பத்மஸ்ரீ பாஸ்கரன், கேலோ இந்தியா போட்டியில் பரிசு பெற்ற கிஷோர் மற்றும் ஸ்ரீநிவாசன் ஆகிய மூவருக்கும் விளையாட்டுத்துறையில் சாதனை செய்ததற்காக விளையாட்டு துறை அமைச்சர், அவர்களுக்கு விருதுகளை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் அமைச்சர் உதயநிதி பேசுகையில்.... விளையாட்டு துறை வரலாற்றில் முக்கிய தருணத்தில் இருக்கிறோம். விளையாட்டு துறையில் பல்வேறு மாற்றங்கள் வேகமாக நடந்து வருகிறது. விளையாட்டில் பல புதிய கண்டுபிடிப்புகளும் உருவாகி வருகிறது. விளையாட்டு துறையின் களம் தொடந்து பல்வேறு தொழில்நுட்பங்கள், சமூக மாற்றங்கள் ஆகியவற்றால் மாறிக்கொண்டு இயக்கப்படுகிறது.

விளையாட்டு துறையை சேர்ந்தவர்கள் மாறி வரும் சூழலுக்கு ஏற்ப தொலைநோக்கோடும், புதிய சிந்தனையோடும், உறுதியோடும் பயணிக்க வேண்டும். தமிழ்நாட்டை இந்தியாவின் விளையாட்டு தலைநகராக மாற்றுவதோடு மட்டுமல்லாமல் இந்தியாவையே உலக அளவில் விளையாட்டு தலைநகராக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு செயல்பட்டு வருகிறோம். அதன் வெளிப்பாடாக தான் தமிழ்நாட்டில் தேசிய மற்றும் சர்வதேச போட்டிகளை நடத்தி வருகிறோம்.

விளையாட்டு வீரர்களுக்கு ஒரு துன்பம் என்றால் அவர்களுக்காக உடனடியாக களத்தில் இறங்கி உதவ கூடிய அரசு தான் தற்போதைய தமிழ்நாடு அரசு. மணிப்பூரில் கலவரக் நடைபெறதால் அந்த மாநிலத்தை சேர்ந்த வால் வீச்சு வீரர்கள் தமிழ்நாட்டில் பயிற்சி அளிக்க முதலமைச்சர் வழிவகை செய்தார். அதனால் அந்த பயிற்சி பெற்ற இருவர் கேலோ இந்தியா போட்டியில் வெண்கலம் வென்றார்கள். அதற்கு காரணம் தமிழ்நாடு அரசு தான்.

தமிழ்நாடு சாம்பியன்ஸ் ஃபவுண்டேசன் மூலமாக இதுவரை சுமார் 100 விளையாட்டு வீரர்களுக்கு 18 கோடி ரூபாய் நிதி உதவி அளித்துள்ளோம். எல்லோரையும் போல மாற்று திறனாளி வீரர்களும் சாதிக்க வேண்டும் என்பதற்காக அவர்களுக்கும் உதவி செய்து வருகிறோம். தமிழ்நாட்டில் முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டி 5 பிரிவுகளின் கீழ் நடத்தப்பட்டது. அதன் மூலம் கிராமப்புறங்களிலிருந்து பல திறமையான விளையாட்டு வீரர்களை கண்டறிய முடிந்தது. விளையாட்டு துறையில் பல சாதனைகளை தமிழ்நாடு படைத்து வரும் நிலையில் இந்த மாநாடு விளையாட்டு துறையை மேலும் பல உயரங்களுக்கு எடுத்து செல்லும் என்பது பெருமையாக உள்ளது.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...

https://chat.whatsapp.com/DV3MG0TGN9x0CYy54GyO6a

#டெலிகிராம் மூலமும் அறிய....

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision