வீட்டின் மாடியில் பதுக்கி வைத்திருந்த 108 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்

வீட்டின் மாடியில் பதுக்கி வைத்திருந்த 108 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்

பொதுமக்களிடம் இருந்து வந்த புகாரை அடுத்து திருச்சி மணிமண்டபம் சாலையில் உள்ள ஒரு வீட்டின் மாடியில் சுமார் 108 கிலோ தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட பான்மசாலா குட்கா போன்ற புகையிலை பொருட்கள் மாவட்ட நியமன அலுவலர் டாக்டர்.ரமேஷ்பாபு தலைமையில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் கொண்ட குழு

ஸ்டாலின், இப்ராஹிம், பாண்டி, பொன்ராஜ், வடிவேல், ஜஸ்டின் மற்றும் ரெங்கநாதன் ஆகியோரால் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், வழக்கு போடுவதற்காக இரண்டு உணவு மாதிரி எடுக்கப்பட்டு தமிழக அரசின் உணவு பகுபாய்வு கூடத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

மேலும், மாவட்ட நியமன அலுவலர் கூறுகையில்  தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட குட்கா மற்றும் பான்மசாலா போன்ற பொருட்கள் கட்டாயம் விற்பனைக்கு வைத்திருக்க கூடாது என்றும், வைத்திருந்தால் உணவு பாதுகாப்பு தர நிர்ணய சட்டம் 2006-இன் படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார். இது போன்ற புகார்களுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள எண்ணிற்கு புகார் தெரிவிக்கலாம்.

டாக்டர்.ரமேஷ் பாபு., மாவட்ட நியமன அலுவலர், உணவு பாதுகாப்பு துறை திருச்சிராப்பள்ளி மாவட்டம்.
தொலைபேசி எண் : 99 44 95 95 95 / 95 85 95 95 95. மாநில புகார் எண் : 94 44 04 23 22

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/Eyd4BfTFH1SEyxmvvYevul

டெலிகிராம் மூலமும் அறிய...
https://t.me/trichyvisionn